பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

4 - ஆம் ஆண்டு

239

திருச்சி மாவட்டம், லால்குடி, சப்தரிஷீசுவரர் கோவில் வடபுறச் சுவரில் உள்ள சாசனம், நந்திப் போத்தரையரின் 4-ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. லால்குடியின் பழைய பெயர் திருத்தவத்துறை என்பது சப்தரிஷீசு வரரின் பழைய பெயர் திருத்தவத்துறை மகாதேவர் என்பதும் இச்சாசனத்திலிருந்து அறியப்படுகின்றன.

சாசன வாசகம்4

1. ஸ்வஸ்தி ஸ்ரீ. யாண்டு 4-வதின் எதிராமாண்டு இடை யாற்று நாட்டுத் திருத்தவத்துறை மஹாதேவர்க்கு தெள்ளாறெறித்த நந்திப்போத்தரை

2.

ல்

3.

A.

யர் குடுத்த பழக்காசு 60. இவ்வறுபது காசும் இஞ் ஞாட்டு நல்லிமங்கலத்துச் சபையோம் இவ் வறுபது காசும் திருத்தவத்துறை மகாதேவர்

ரிடை கொண்டு நாராய நாழியால் நிசதி நாழிசெய் ஒரு நொந்தா விளக்கு சந்திராதித்தவல் இரவும் பகலும் எரியக் கொண்டு சென்று அளப்போ மானோ

ம் நல்லிமங்கலத்து சபையோம் திருத்தவத்துறை மஹா தேவர்க்கு அளவோமாயில் முட்டில் முட்டி ரட்டியும் மூலைப்பட்ட பன்மஹேஸ்வரரே

5. சபையாகவும் தனித்ததாகவும் நிலைக்கள முள்ளிட்ட தான் வேண்டுகோவினுக்கு புக்களவு இருநூற்றுப் பதினாறு காணம் தண்டமிட ஒ

6.

ட்டினோம் நல்லிமங்கலத்து சபையோம். இது பன் மஹேஸ்வரர் நாற்பத்தொண்ணாயிரவரு மிரக்ஷை.

4 - ஆம் ஆண்டு

தென் ஆர்க்காடு மாவட்டம், திருக்கோயிலூர் தாலுகா, கீழுர் வீரட்டானேசுவரர் கோயிலில் உள்ள சாசனம்.