பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

247

இவனுடைய (யஜ்ஞபட்டனுடைய) தந்தை, சொல்லின் செல்வி (கலைமகள்)யின் கணவனைப் (பிரமனைப்) போல் தூய்மையான அறிவையுடைய சிவதாசன் என்னும் பெயரையுடையவன். இவனு டைய தாயார், நல்ல பெருங் குணங்களைப் பெற்றதனால் நிலமகளைப் போன்ற திரேணமணி என்பவள்.

இவனுடைய பாட்டன் யஜ்ஞன் என்பவன் ; கலாநிதியைப் போல (சந்திரனைப் போல) கலைகளின் உறைவிடமாகவும், சுத்தமான நடத்தையுடையவனாகவும், இருபிறப்பாளரில் சிறந்தவனாகவும், அறியாமை என்னும் இருளை ஓட்டுகிறவனாகவும், திக்கெங்கும் புகழ்பெற்றவனாகவும் இருந்தான்.

அந்தக் கடவுளாகிய சர்வனுக்கு (சிவனுக்கு)ப் பூசை வணக்கம் முதலிய ஊழியம் செய்வதற்குத் திருக்காட்டுப் பள்ளிக் கிராமத்தை அரசன் தானமாக வழங்கினான்.

தனது வீரத்தினால் விளங்கப்பட்டவனும் தனது ஈகையினால் ராதேயனுக்கு (கர்ணனுக்கு)ச் சமானமானவனும் நல்ல ஒழுக்க முடையவனும் வீரமிக்க சோழகுலத்துக்குச் சூளாமணி போன்றவனும் ஆன குமாரங்குசன் என்னும் பெயருள்ளவன் இந்தத் தானத்தைச் செய்யக் கேட்டுக் கொண்ட விஞ்ஞாபதியாவன்.

இதற்கு ஆஜ்ஞாபதியாக இருந்தவன், அரசனுடைய அமைச்சனான, அக்ரதந்த மரபு என்னும் வேனிற்கால வானத்திலே வெண்ணிலா போன்று விளங்கும் நம்மன் என்னும் பெயருள்ளவன்.

மனம் வாக்கு காயங்களினாலே மற்றவரின் நன்மைக்காக உழைக்கிற மாகேசுவா மனோதீரன் என்பவன் இந்த மெய்கீர்த்தியைக் கூறினான்.

தமிழ் சாசனம்

இவ்வாறு எழுதப்பட்ட வடமொழி சாசனத்திற்குப் பிறகு, கீழ்கண்ட தமிழ்சாசனம் எழுதப்பட்டுள்ளது :-

"புழற்கோட்டத்து நாயறு நாட்டுத் திருக்காட்டுப்பள்ளிப் பஞ்சவரம் ஆஇரக்காடி. இது கோவிசைய நந்தி வர்ம்மற்கு யாண்டு ஆறாவது சோழ மஹாராஜர் விண்ணப்பத்தால் இரையூர் உடையான் நம்ப னாணத்தியாகத் திருக்காட்டுப்பள்ளிச் சன்னக்குறி யஜ்ஞபட்ட