பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

ரெடுப்பித்த யஜ்ஞேஸ்வரத்து மஹாதேவர்க்கு நாட்டு நீங்கலாய் உட்புரவாய தேவர் தானமாகப் பெற்றதற்குப் பெற்ற பரிஹாரம் நாடாட்சியும் ஊராட்சியும் புரவு பொன்னும் திருமுக்காணமும் வட்டியும் நாழியும் புதாழியும் தட்டு காயமும் ஈழம் பூட்சியும் இடைபூட்சியும் மன்றுபாடும் தரகும் தறிக்கூறையும் கூலமும் நல்லாவும் நல்லெருதும் நல்லாடும் நாடு காவலும் ஊடுபோக்கும் கல்லாணக் காணமும் குசக்காணமும் பாறைக்காணம் பட்டின சேரியும் மற்று மிவ்வூரெல்லை உள்ளகப்பட்டது கோத்தொட்டுண்ணப் பாலதெல்லாம் எவ்வகைப் பட்டதும் கோக்கொள்ளப் பெறாதே இவ்யஜ்ஞேஸ்வரத்து மஹாதேவ ரேய் கொள்ளப்பெற்றதற்குப் பெற்ற வியவஸ்தை சுட்டோட்டால் மாடமாளிகை எடுக்கப் பெறுவதாகவும் தமனகமும் இருவேலியும் செங்கழுநீரும் உள்ளியும் நடப்பெறுவதாகவும். காவுதெங்கிடப் பெறுவதாகவும். துரவு கிணறிழித்தப் பெறுவதாகவும் பெருஞ் செக்கிடப் பெறுவதாகவும் இவ்வூரெல்லை உள்ளிட்ட தெங்கும் பனையும் இவர்கள் மனமின்றி ஈழவ ரேறப்பெறா தாராகவும் இவ்வகைப்பட்ட வியவஸ்தையினோடு யஞ்ஜேஸ்வரத்து மஹா தேவர்க்குத் தேவதானமாய் ஸர்வ பரிஹாரமாக பரடத்தி சென்றது.

மீண்டும் வடமொழிச் சுலோகம் எழுதப்பட்டுள்ளது. அதன் கருத்து வருமாறு :-

66

ஓ! எதிர் காலத்தில் உலகத்தை ஆளப்போகிறவர்களே! அரசர்களுக்குக் கொடி போன்ற நந்திவர்மன், அரனுடைய மலரடிகளாகிய சூளாமணியால் விளங்கப் பெற்ற தன் தலையை வணங்கி, தாமரை போன்ற கைகளைக் குவித்து இந்த நல்ல செயலை (இந்த அறத்தை) எப்போதும் காப்பாற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இந்தத் தருமமாகிய பாலம், எல்லா

அரசர்களுக்கும் பொதுவானது. ஆகையினாலே, இந்த அறத்தை எல்லாக் காலத்திலும் காத்தருளும்படி இப்போதுள்ள அரசர்களையும் எதிர் காலத்தில் வரப்போகிற அரசர்களையும் இந்த இராமன் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

தச்சர் குலமென்னும் ஆகாயத்துக்கு வெண்ணிலா போன்று விளங்கும், வேலைத்தரத்தில் எங்கும் புகழ்பெற்ற சிற்றாயன் மகன் பேராயன் இந்த ஏடுகளை எழுதினான்.

66

எழுத்து.

கச்சிப்பேட் டைம்மனைச் சேரிக் காஷ்ட காரிமகன் பேராயன்

وو