பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

சயாம் தேசத்துச் சாசனம்

265

சயாம் தேசத்து தகோபா மாவட்டத்தில் காவு பஃரஹ் நாராய் (நாராயண குன்று) என்னும் இடத்தில் ஒரு தமிழ் எழுத்துச் சாசனம் கண்டுபிடிக்கப்பட்டது. அச்சாசனத்தில் சில எழுத்துக்கள் மறைந்து விட்டன. அது அவனி நாரணன் (தெள்ளாறெறிந்த நந்திவர்மன்) காலத்துச் சாசனம் என்று சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் கருதுகிறார்கள். அந்தச் சாசனத்தின் வாசகம் இது :

1.

2.

3.

4.

5.

6.

LUIGA BO hahh

கிய

G

hilணம் மணி F1மலை]

टे

ம்

சயாம் தேசத்துச் சாசனம். இதன் வாசகத்தை கீழே காண்க.

......ரவர்மன்கு.........

(ம)ா ந தாநநங்கூரடை.....

....தொட்டகுளம் பேர் ஸ்ரீ அ.......

நாரணம் மணிக் கிராமத்தார்.....

கும் சேனா முகத்தார்க்கும்

...முதார்க்கும் அடைக்கலம். 40

பாண்டியன் வரகுணமகாராசனுடைய சாசனம்

கீழ்க்கண்ட சாசனம் சோழநாட்டில் உள்ளது. வரகுண மகாராசன், சோழநாட்டை வென்று அரசாண்ட காலத்தில் இது எழுதப் பட்டது. அக்காலத்தில் சோழ நாட்டில் வழங்கிய வட்டெழுத்தினால் எழுதப் படாமல் சோழ நாட்டிலும் தொண்டை நாட்டிலும் வழங்கிவந்த பல்லவ எழுத்தினால் இச்சாசனம் எழுதப்பட்டுள்ளது.