பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவர்கோயில் சாசனம்*

புதுக்கோட்டையைச் சேர்ந்த குளத்தூர் தாலுகா கொடும் பாளூரில் மூவர்கோயில் என்னும் இடத்தில் கிரந்த எழுத்தில் எழுதப் பட்ட வடமொழிச் சாசனம் ஒன்று இருக்கிறது. கொடும்பை என்னும் கொடும்பாளூரை அரசாண்ட பூதி விக்கிரம கேசரி என்னும் வேளிர்மரபைச் சேர்ந்த சிற்றரசன் இந்தச் சாசனத்தை எழுதினான். இவன் தன் மனைவியர் இருவர் பேராலும் தன் பேராலும் ஆக மூன்று கோயில்களைக் கட்டியதோடு பெரிய மடம் ஒன்றையும் கட்டி, அந்த மடத்தைக் காளமுகச் சைவ குருவாகிய மல்லிகார்ச்சுனர் என்பவருக்குத் தானம் செய்தான். அன்றியும், 50 துறவிகளுக்கு உணவுக்காகப் பதினொரு கிராமங்களையும் தானம் செய்தான். இந்த செய்தியைக் கூறுகிற இந்த சாசனத்தில், பூதிவிக்கிரம கேசரியின் முன்னோர்களான ஏழு தலைமுறையில் இருந்தவர்களின் செய்தி களும் கூறப்படுகின்றன. இந்தச் செய்திகள் பழைய சரித்திர வரலாற்றினைக் கூறுகிறபடியினால் மிகவும் உபயோகம் உள்ளவை.

இந்தச் சாசனத்தின் முதல் பகுதியும் கடைசிப் பகுதியும் அழிந்து விட்டன. இந்த மூவர்கோவில் சாசனத்தை முதன்முதல் கண்டுபிடித்த வெங்கையா அவர்கள் 1907-08 ஆம் ஆண்டு, சென்னை எபிகிராபி அறிக்கையில் வெளியிட்டார். பிறகு இந்தச் சாசனம் புதுக்கோட்டை சாசனங்கள் என்னும் நூலில் 14-ஆம் எண் சாசனமாக வெளியிடப்பட்டது.' சரித்திரப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி அவர்கள் கீழ்நாட்டு ஆராய்ச்சி என்னும் ஆங்கில வெளியீட்டில், 1933- இல் சாசனத்தை வெளியிட்டதோடு இதன் கருத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.2

நமது ஆராய்ச்சிக்கு இந்தச் சாசனம் பெரிதும் வேண்டியதா யிருக்கிறது. ஆகையினால், இந்தச் சாசனக் கருத்தைத் தமிழில் தருகிறேன்.

  • வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் (1957) நூலில் இடம் பெற்ற கட்டுரை.