பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

அவர்கள் கூந்தலிலேயும், நெருக்கமானது அவர்கள் தனத்திலேயும் காணப்பட்டன. (மற்ற இடங்களில் காணப்படவில்லை.)

8. இவனுடைய இரண்டு நல்ல மனைவியர் கற்றளி, வரகுணை என்பவர். கற்றளி இரண்டு அழகான பிள்ளைகளாகிய பராந்தகன், ஆதித்யவர்மன் என்பவரைப் பெற்றாள்.

9. தவவொழுக்கத்தில் சிறந்தவரான வித்தியாராசி என்பவரின் சீடரும் அத்ரேய கோத்திரத்தில் பிறந்து வேதங்களைக் கற்று மதுரையில் வசித்து வந்தவருமாகிய புகழ் பெற்ற மல்லிகார்ச்சுனர் என்பவர் ஒருவர் இருந்தார்.

10. தன் பெயரினாலும் தனது இரண்டு மனைவியர் பெயரினாலும் மூன்று விமானங்களை அமைத்து அவற்றில் மகேசுவரரை எழுந்தருளி வித்து இவன் (விக்கிரமகேசரி) அவனுக்கு (மல்லிகார்ச்சுனருக்கு) ஒரு பெரிய மடத்தை அளித்தான்.

"

11. இந்த யாதவன், காளமுக வழிபாட்டைச் செய்யும் முனிவர் தலைவனுக்கு ஒரு பெரிய மடத்தையும் அதனுடன் சேர்ந்த பதினொரு கிராமங்களையும் கொடுத்தான்.

12. அசித வக்ரத் (காளமுக) துறவிகள் ஐம்பதின்மருக்காகப் பெரிய மடத்தையும்... சந்தனம், புஷ்பம், அட்சதை, தூபம், தீபம், தாம்பூலம்....அரசன்...............

இந்த சாஸனத்திலிருந்து கீழ்கண்ட சிற்றரசர், யாதவகுலத்தைச் சேர்ந்த வேளிர், கொடும்பாளூரில் இருந்தார்கள் என்பது தெரிகிறது. பாண்டியனுடைய யானைப்படையை வென்றவன் பெயர் காணப்பட வில்லை.

1. பிரவீரஜித்து,

2. வரதுங்கன் (மழவரை வென்றவன்.)

3. அதிவீர அநுபமன்

4. சங்க கிருத்து

5. நிருபகேசரி (இளமையில் பாம்புகளோடு வளர்ந்தவன்) 6. பரதுர்க்கமர்த்தனன் (வாதாபிஜித்)

7. சமராபிராமன்