பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

கட்டிய இரண்டாம் நந்திவர்மனான பரமேசுவரன் பாம்புக்கொடியை யுடையவன் என்று திருமங்கை ஆழ்வார் கூறுகிறார்.

"தேம்பொழில் குன்றெயில் தென்னவனைத் திசைப்பச் செருமேல் வியந்து அன்றுசென்ற பாம்புடைப் பல்லவர் கோன் பணிந்த

பரமேச்சுர விண்ணகர மதுவே.'

என்று கூறுகிறார்.4

இதனால் பல்லவருக்குப் பாம்புக்கொடி உண்டென்பது தெரிகிறது. அன்றியும் நாகர் (பாம்பர்) என்னும் பெயரும் அவருக் கிருந்ததென்பது விளங்குகிறது. கொடும்பாளூர் அரசனான நிருபகேசரி, இளமையில் பாம்புகளோடு வளர்ந்தான் என்று கூறப்படுவதன் கருத்து, அவன் பல்லவர் குடும்பத்தில் வளர்ந்தான் என்பதாகும். பல்லவ இராச்சியத்தின் அருகில் இருந்த கொடும்பாளூர் சிற்றரசர், பல்லவரோடு நட்புடையவராய் இருந்தனர். ஆகவே சங்ககிருது தன் மகனான நிருபகேசரியைப் பல்லவர் அரண்மனையில் வளரவிட்டான் என்பதனால் அவன் பல்லவருடன் நட்பு முறையில் இருந்தான் என்பது தெரிகிறது. சங்ககிருது, பல்லவ அரசனான சிம்ம விஷ்ணுவின் காலத்திலும், நிருபகேசரி முதலாம் மகேந்திவர்மன் காலத்திலும் இருந்தவராதல் வேண்டும். எனவே, நிருபகேசரி தனது இளமையில் மகேந்திரனுடன் வளர்ந்தான் போலும்.

நிருபகேசரியின் மகனான பரதுர்க்கமர்த்தனன் (பகைவர் கோட்டையை அழிப்பவன் என்பது பொருள்.) வாதாபிஜித் (வாதாபி நகரத்தை வென்றவன்) என்று கூறப்படுகிறான். எனவே இவன், மாமல்லனான நரசிம்ம வர்மன் புலிகேசியின் வாதாபி நகரத்தின் மேல் படை யெடுத்தபோது அவனுடன் வாதாபிக்கு சென்று அப்போரில் கலந்து கொண்டு அந் நகரை வென்றான் என்பது தெரிகிறது.

வன் மகன் சமராபிராமன் (போர் செய்வதில் உவகை கொள்பவன்), அதிராசமங்கலத்தில் சளுக்கியனைக் கொன்றவன் (வென்றவன்) என்று கூறப்படுகின்றான். “அதிராஜமங்கலாஜௌ யோ நிஜகான சளுக்கிம்” என்பது வாசகம். இதில் நிஜகான என்னும் வினைச் சொல்லுக்குக் கொன்றான் என்றும் எதிர்த்தான் என்றும் இரண்டு பொருள் உண்டு. இவ்விரண்டும் பொருள்களில் கொன்றான் என்பதே