பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

இந்தப் பழைய வழக்கத்துக்கு மாறாகச் சிற்றரசனும் வேளிர் மரபைச் சேர்ந்தவனுமாகிய சமராபிராமனுக்குச், சோழன் தன் மகளை மணஞ்செய்து கொடுத்தான் என்று கொடும்பளூர்ச் சாசனம் கூறுகிறது. இந்த மாறுதலுக்குக் காரணம் என்ன? இக்காலத்தில் சோழ மன்னர், பல்லவ அரசருக்குக் கீழ்பட்டு அவருக்கு அடங்கியிருந்தனர். அதாவது முடியுடைமன்னர் வழியில்வந்தவராக இருந்தும் சோழர் பல்லவருக்குக் கீழ்ப்பட்டிருந்தனர். ஆனால், முடியுடை வேந்தரல்லாத சிற்றரசராகிய கொடும்பாளூர் வேளிர், பல்லவருக்கும் பாண்டியருக்கும் கீழடங்காமல் சுதந்தரராக வாழ்ந்திருக்கிறார்கள். அன்றியும் பல்லவ அரசருக்கு நண்பர்களாக அவரைச் சார்ந்து பெருமைப் பெற்றிருந்தனர். ஆகவே, பல்லவரின் கீழ் சிற்றரசனாக இருந்த சோழன் தன் மகளைச் சமராபிராமனுக்கு மணஞ்செய்வித்தான் போலும்.

சமராபிரான் மகன் பூதிவிக்ரமகேசரியும் சோழர் குடும்பத்தில் மணஞ்செய்து கொண்டவனாகத் தெரிகிறான், இவனுக்கு முன்னர் மூன்று தலைமுறைவில் இருந்தவர்கள், பல்லவருடன் நண்பராக இருந்திருக்க, இவன் பல்லவரோடு பகைத்து அவர்கள் சேனையை வென்றான் என்று சாசனம் கூறுகிறது. பூதிவிக்ரமகேசரி, இரண்டாம் நரசிம்மவர்மனான இராஜசிம்மன் காலத்தில் இருந்தவனாதல் வேண்டும். இவன் பல்லவரைப் பகைத்தபடியினால், இவனுடைய இரண்டாம் பாட்டனான நிருபகேசரி பல்லவ அரசருடன் வளர்ந்தான் என்று கூறாமல், பல்லவர் மீது இவனுக்கிருந்த வெறுப்புத் தோன்றும் படி பாம்புகளோடு வளர்ந்தான் என்று இவனுடைய கொடும்பாளூர் சாசனம் கூறுகிறது போலும்.

ஆனால்,

பூதிவிக்கிரமகேசரியின் கொடும்பாளூர்ச் சாசனத்தை ஆராய்ந்தவர்களில் சிலர் தவறான கருத்தையும் வென்றும் யூகத்தையும் ஆதாரமாகக் கொண்டு பூதிவிக்ரமகேசரி கி.பி.10-ஆம் நூற்றாண்டில் இருந்தவன் என்று முடிவுகட்டியுள்ளனர்.5 வேறு சில ஆராய்ச்சியாளர்கள் பூதிவிக்ரமகேசரி கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 8-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவன் என்று கூறுகின்றனர். கி.பி.7-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்தவர் என்பதே ஆராய்ச்சிக்குப் பொருத்தமாக இருக்கிறது.