பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யுவான் சுவாங் யாத்திரைக் குறிப்பு*

யுவான் சுவாங் என்னும் சீன யாத்திரிகர், இந்திய தேசத்தில் செய்த யாத்திரையைப் பற்றி எழுதிய குறிப்பிலே, தமிழ் நாட்டைப் பற்றிய குறிப்புகளைக் கூறுவோம்.

66

சுலிய

'தன கடகத்திலிருந்து யாத்திரிகர் தென் மேற்காக 1000 லீ கடந்து சுலியவுக்குச் சென்றார். இந்த நாடு 2400 லீ சுற்றளவுள்ளதென்றும் இதன் தலைநகரம் 10 லீ சுற்றளவுள்ளதென்றும் சொல்லப்படுகிறது. இங்கே ஜன நெருக்கமில்லாத காடடர்ந்த பிரதேசம் அதிகம். வழிபறிக் கொள்ளைக்காரர் அதிகம். சதுப்பான வெப்பமுள்ள பிரதேசம். னங்கள் பயங்கரமாகவும் துன்மார்க்கராகவும் இருக்கின்றனர். தீர்த்தங்கரை வழிபகிறார்கள். பௌத்த விகாரைகள் பாழடைந்து கிடக்கின்றன. சிலவற்றில் மாத்திரிம் பிக்ஷக்கள் இருக்கிறார்கள். தேவாலயங்களும் அநேக திகம்பர ஆலயங்களும் இருக்கின்றன. தலைநகருக்குத் தென்கிழக்கில் அசோகர் கட்டிய சேதியம் ஒன்று உண்டு.....

இதில், தனகடகம் என்று கூறப்படுவது தான்ய கடகம் என்னும் பயரையுடைய அமராவதி நகரம். இது கிருஷ்ணா நதிக்கரையில் இருக்கிறது. இந்த நகரத்திலிருந்து சுலிய நாடு தென்மேற்கில் இருப்பதாகக் கூறப்பட்ட போதிலும் யாத்திரிகரின் வரலாற்று நூலில் ஓர் இடத்தில் மேற்கில் என்றும் இன்னொரு இடத்தில் தெற்கில் என்றும் எழுதப் பட்டிருக்கிறது. சுலிய என்பது சோடை அல்லது சோழ என்பதாகும். கன்னிங்காம் அவர்கள் சுலிய என்னும் இடம் தற்போதைய கர்னூல் மாவட்டம் என்று கூறுகிறார்.2 மேலும் தரணிக் கோட்டையிலிருந்து (தனகடகம்) மேற்கு தென்மேற்கில் 160 மைலில் உள்ள தென்று கூறுகிறார்.

6

  • வாதாபிகொண்ட நரசிம்மவர்மன் (1957) நூலில் இடம்பெற்ற கட்டுரை.