பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

இந்நகரத்தைவிட்டு இலங்கைக்குப் போகு முன்னரே, இலங்கை அரசன் இறந்து விட்டான். அங்குப் பஞ்சமும் குழப்பமும் ஏற்பட்டிருந்தன. அங்கிருந்து 300 பிக்குகள் இந்தியாவுக்கு வந்து விட்டார்கள். அவர்கள் காஞ்சீபுரத்திற்கு வந்தபோது, சீன யாத்திரிகர் அவர்களைச் சந்தித்து இவ்வாறு கேட்டார்:-

உங்கள் நாட்டிலே பத்தந்தர் (புத்தர்), ஸ்தவிர பௌத்த மதத்தைப் போதித்துத் திரிபிடகத்தையும் யோக சாஸ்திரத்தையும் அருளிச் செய்தார் என்று அறிகிறேன். அவற்றைக் கற்றுக் கொள்ள நான் அங்கே போக விரும்புகிறேன். நீங்கள் ஏன் இங்கு வந்துவிட்டீர்கள்?

அதற்கு அந்தப் பிக்குகள், பஞ்சம் ஏற்பட்டதால் இங்கு வந்து விட்டதாகவும், அன்றியும் புத்தர் பிறந்து வளர்ந்த ஜம்புத்தீவில் (பாரத நாட்டில்) உள்ள பௌத்த திருப்பதிகளைக்கண்டு வணங்கு வதற்காக வந்ததாகவும் கூறினார்கள். மேலும் அவர்கள் சொன்னார்கள் : 'எங்களுக்கு மேல் அதிகமாகக் கற்றவர்கள் அங்கு இல்லை. தங்களுக்கு ஏதேனும் தெரிய வேண்டுமானால் எங்களைக் கேட்கலாம்' என்று கூறினார்கள். அதன் மேல் சீன யாத்திரிகர், யோக சாத்திரத்தில் தமக்கிருந்த சில ஐயங்களைப் பற்றி அவர்களிடம் கேட்டார். அதற்கு இலங்கைப் பிக்குகள் கூறிய விடை சீலபத்திரர்5 கூறியதற்கு மேற்பட்டதாக இல்லை.’

66

மொ லொ கூட (மலகூட)

காஞ்சீபுரத்தை விட்டு சீனயாத்திரிகர் தெற்கே 3000 லீ சென்று மொலெகூட தேசத்தை யடைந்தார். இந்தத் தேசம் 5000 லீ சுற்றளவுள்ளதென்றும், தலைநகரம் 40 லீ சுற்றளவுள்ள தென்றும் கூறுகிறார். நிலம் புதர்களடர்ந்த கரம்பாகவும் விளை வில்லாமலும் இருந்தன. இங்கு அதிக வெப்பமாகவும் மக்கள் கருநிறமுள்ளவர் களாகவும் இருந்தனர். அநேக பௌத்த விகாரைகள் இருந்தன. ஆனால் சில விகாரைகள் மட்டும் நன்னிலையில் இருந்தன. பிக்குகள் சொற்பத் தொகையினர் இருந்தனர். வெவ்வேறு பிரிவினருக்குத் தேவாலயங்கள் இருந்தன. முக்கியமாகத் திகம்பரர்கள் அதிகமாக இருந்தார்கள். தலைநகருக்குக் கிழக்குப்புறத்தில் அசோக சக்கரவர்த்தியின் தம்பியாரான மகேந்திரன் கட்டிய பழைய பௌத்த விகாரையின் இடிந்து போன கட்டிடம் இருந்தது. இது புத்தர் பெருமான் உபதேசம் செய்த இடமாகையால், அதை நினைவு கூர்தல் பொருட்டு இது கட்டப்பட்டது. காலப் பழமையுள்ள இந்த இடம். அடியவர் விரும்பிய கோரிக்கையை நிறைவேற்றி வைக்கும் சக்தியுடையது