பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

பதிப்பு : எண் 484. தென் இந்திய சாசனங்கள், தொகுதி ஏழு. (No. 484. S.I.I. Vol. VII.)

விளக்கம் : இது சண்டேசுவரர் ஓலைச் செய்யுள். தண்டீசுவரர் ஓ லை என்றும் கூறப்பெறும். சண்டேசுவரர் அல்லது தண்டீசுவரர் என்பவர் சைவ அடியார்களில் ஒருவர். சிவன் கோவில்களில், எல்லா விசாரணைகளையும் செய்யும்படி சிவபெருமான் சண்டேசுவரரை ஏற்படுத்தியதாகப் புராண வரலாறு கூறுகிறது. இந்த வரலாற்றுப்படி சிவன் கோவில் வரவு செலவு கணக்குகளைச் சண்டேசுவரர் பேரினால் எழுதுவது பண்டைக் காலத்து மரபு. இந்தச் செய்யுள் அந்த மரபைக் கூறுகிறது.

“புகழ்மாது விளங்க ஐயமாது விரும்ப” என்று தொடங்குகிற ரு சாசனத்தின் கீழே இந்தச் செய்யுள் எழுதப்பட்டுள்ளது.

சாசனச் செய்யுள்

சண்டேசுவரன் ஓலை சாகரஞ்சூழ் வையகத்தீர் கண்டீச்சரன் கரும மாராய்க - பண்டேய்

அறஞ்செய்தான் செய்தான் அறங்காத்தான் பாதம் திறம்பாமைச் சென்னிமேற் கொள்க.

குறிப்பு :- இந்தச் செய்யுள், பாடபேதங்களுடன் வேறு சாசனங்களிலும் எழுதப்பட்டுள்ளது. அவற்றை இங்கே குறிப்பிடுவது அமைவுடைத்து.

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் தாலுகா, உடையார் கோயில் திருக்களாவுடைய மகாதேவர் ஆலயத்தின் வடபுறச் சுவரில் உள்ள செய்யுள். (எண். 1041, தென் இந்திய சாசனங்கள், தொகுதி ஏழு.)

தண்டீச்சரன் ஓலை சாகரஞ்சூழ் வைய்யகத்து கண்டீச்சுரன் கருமம் ஆராய்மின் - பண்டே

அறஞ்செய்தான் செய்தான் அறங்காத்தான் பாதம் திறம்பாமல் சென்னிமேல் வைத்து.

தென் ஆர்க்காடு மாவட்டம், விழுப்புரம் தாலுகா, திருமாத்தூர், அபிராமேசுவரர் கோவில் முதல் பிரகாரம் தென்புறச் சுவரிலும் இதே செய்யுள் பாடபேதத்துடன் காணப்படுகிறது. (எண் 750, தென் இந்திய சாசனங்கள், தொகுதி எட்டு.)