பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

பெயர் கவகாசி கலையன் குமரன் ஆன தம்பிரான் தோழன் என்பது, இச் செய்தி மேலப்பெரம்பலூர் தக்ஷிணபுரீஸ்வரர் கோவிலில் சாசனத்தில் காணப்படுகிறது.

திருசெங்காட்டங்குடி கோவில் சாசனம் இராஜராஜன்-2 உடைய 13-ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. நான்கு பெண்கள் அக்கோவிலுக்குத் தேவரடியாராக 700 காசுக்கு விற்கப்பட்டனர் என்று கூறுகிறது.

திருவாலங்காடு வீரட்டானேசுவரர் கோவில் சாசனம், அக் கோவிலில் அடிமை ஊழியர்கள்பற்றிக் கூறுகிறது. இவ்வடிமைகளில் சிலர் வயிராதராயராலும் அவர் மனைவியராலும் கோவிலுக்குக் கொடுக்கப்பட்டவர். வேறு சில அடிமைகள் காசு கொடுத்து

வாங்கப்பட்டவர்.

திருச்சி மாவட்டம் திருச்சித் தாலுகா திருப்பலத்துறை தாருகவ னேசுவரர் கோவில் சாசனம் சக ஆண்டு 1926-இல் எழுதப்பட்டது. கி.பி. 1374-இல் எழுதப்பட்டது. மழவதரையர் என்பவர் தன்னிடமுள்ள அடிமைகளைப் பிரீதிதானமாகக் கொடுத்ததை இச்சாசனம் கூறுகிறது. இவருக்கு உள்ள நிலபுலங்களையும் வீடு டு மனைகளையும் பிரீதிதானமாகக் கொடுத்த இவர், தமது அடிமைகளையும் தானமாகக் கொடுத்தார், அந்த அடிமைகளின் பெயர்களும் கூறப்படுகின்றன. அப்பெயர்களாவன :- தவஞ்செய்தாள் மகள் செங்கழுநீர்ப் பிள்ளை, நல்லாம் பிள்ளை மகன் தாயினும் நல்லான், வெள்ளாட்டி சிவந்தாள், பிறவி, அழகியாள், இவள் மகள் நம்பாள், இவன் தம்பி வளத்தான்; இவன் தம்பி தாழி, இவன் தம்பி வளந்தான், இவன் தம்பி ஆண்டி, பிறவி முதல் ஆண்டி வரையில் உள்ள ஏழு பேரையும் மழவதரையர், கம்பண்ண உடையார் காரியப்பேர் சந்தரசன் என்பவரிடமிருந்து விலைக்கு வாங்கினார். மற்றவர்கள், இவர்களிடம் முன்னமே அடிமைகளாக இருந்தவர்.

புதுக்கோட்டை திருமையம் தாலுகா திருமையம் சத்திய மூர்த்திகோயில் சாசனம் பராக்கிரம பாண்டிய தேவர் என்னும் அரசனுடைய 7-ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. ஒரு பிரபு தன் மகனுக்குக்காணி மனை அடிமை கொடுத்ததை இச்சாசனம் கூறுகிறது. "சீரனத்தேவன் முனையத்தரையன் மக்கள் நயனாரேன், என் மகன் சீரானத்தேவர்க்கு நான் குடுத்த கணியாட்சியும் மனையும் அடிமையும் பிரமானம் பண்ணிக் குடுத்த பரிசாவது" என்று இந்தச் சாசனம்