பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

தண்டேசுரன் ஓலை தாபரஞ்சூழ் வையகத்து

கண்டீசன் கருமம் ஆராய்க - பண்டே

அறஞ்செய்தான் செய்தான் அறங்காத்தான் பாதம் திறம்பாமல் சென்னிமேல் வைத்து.

31

வெண்ணெயூரில் உள்ள விசுவநாதர் கோவிலில், இதே செய்யுள் வேறு பாடபேதத்துடன் காணப்படுகிறது. அது, “செந்தமிழ்”, நான்காந் தொகுதியில், 252-ஆம் பக்கத்தில் அச்சிடப்பட்டிருக்கிறது. பாடபேத முள்ள முதல் இரண்டடி இது:

66

'தண்டீச் சுரன் கோயிற் றாபரஞ்சூழ் வையகத்திற்

கண்டீச் சுரங் கருப்ப மீறாகப் - பண்டே”

புதுக்கோட்டை, திருமெய்யம் தாலுகா, கள்ளம்பட்டி, மதீசுவரர் கோவிலின் முன்புள்ள ஒரு கல்லில் இச்செய்யுள் எழுதப்பட்டுள்ளது. அது, புதுக்கோட்டை சாசனங்கள் 989-ஆம் எண்ணில் அச்சிடப் பட்டிருக்கிறது. இடையிடையே சில எழுத்துக்கள் மறைந்துவிட்டன.

மகதைப் பெருமாள்

ம்: வடஆர்க்காடு மாவட்டம், திருவண்ணாமலை தாலுகா, திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில், முதல் பிரகாரம், வடக்குப் பக்கச் சுவரில் உள்ளது.

பதிப்பு : எண் 97. தென் இந்திய சாசனங்கள், தொகுதி எட்டு. (No. 97. S.I.I. Vol. VIII.) 'செந்தமிழ்' மூன்றாந் தொகுதி,

பக்கம் : 427-432.

விளக்கம் : மகதைப் பெருமாள் என்பவரின் வீரத்தையும் வெற்றியையும் புகழையும் கூறுகின்றன இந்தச் செய்யுட்கள். மகதை என்பது மகதநாடு. இதற்கு நடுநாடு என்னும் பெயரும் உண்டு. மகதைப் பெருமாள் வாண குலத்தைச் சேர்ந்தவன். ஆகையால், வாணகோ வரையன் என்றுங் கூறப்படுகிறான். மகதைப் பெருமாள், திருவண்ணா மலை கோவிலைப் பொன் வேய்ந்தான். ஆதலால், பொன் பரப்பினான் மகதைப் பெருமாள் என்றும் கூறப்படுகிறான். இவன் சோழ அரசனுக்குக் கீழ்டங்கியவன்.