பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

சொல்லி விடுசெரு மீனவர் சூழு முரிமைகொ டாழ்கட லெல்லி விடுபட வெறுவ ரேனு மியமபுரி யேறுவர் கொல்லி விடுமுத காதிபர் கூளி கருதில ரூர்புக

வல்லி விடும் அயிராவதம் வாணன் வரவிடு நாளையே.

வேளை நெடுங்கல்லும் வெட்டும் விரற்குகையு மூளை தெரிக்கு முடித்தலையு - நாளை மதிவா ணுதல்மடவாய் காணலாம் வாண னதிவா ரணன்தொடர்விட் டால்.

35

19

20

குறிப்பு :- 3-ஆம் செய்யுள். மனிதரை யானையால் மிதித்துக் கொல்லும் வழக்கம் அக்காலத்திலிருந்ததை இச்செய்யுள் கூறுகிறது.

4-ஆம் செய்யுள். அரசர் தமது பிறந்த நாளில் போர் செய்வது மரபன்று. பொன்பரப்பினானான மகதைப் பெருமாளும், தான் பிறந்த திருவுத்திராட நாளில் போர் செய்வதில்லை என்பது கருத்து.

15-ஆம் செய்யுள். இரண்டாம் அடியில், "குடாவடுகர்” என்றிருப்பது "கொடா வடுகர்” என்றிருக்க வேண்டும். ஆனால், சாசனங்களிலெல்லாம் இச்சொல் “குடு” என்றே எழுதப்படுகிறது. குடு என்னும் பழைய உருவம் இக்காலத்தில் “கொடு” என்று திரிந்துள்ளது போலும்.

பொன்பரப்பினானான மகதைப் பெருமாளின் சிறப்புக்களைக் கூறுகிற இந்தச் செய்யுட்களில் சில, திருவண்ணாமலை தாலுகா, செங்கமா கிராமத்தில் உள்ள ரிஷபேசுவரர் கோவில் தென்புறச் சுவரிலும் எழுதப்பட்டுள்ளன. அவை, தென் இந்திய சாசனங்கள், ஏழாந் தொகுதி, 123-ஆம் நெம்பரில் அச்சிடப்பெற்றுள்ளன. மேலேயுள்ள செய்யுள்களில் 9, 10, 12, 11, 13, 16, 19 எண்ணுள்ள செய்யுள்கள் அந்தச் சாசனத்தில் எழுதப்பட்டுள்ளன. ஆகையால் அவற்றைத் தனியே இங்குக் காட்டவில்லை.

அடிக்குறிப்புகள்

1. சிங்கன் என்பது ரிஷபேசுவரர் கோவில் சாசனத்திற் கண்ட பாடம்.

2. பின்பொரு என்றும் பாடம் உண்டு. 3. கழுங்கினங்கள் என்னும் பாடம்.