பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

மகதைப் பெருமாள்

இடம் : வடஆர்காடு மாவட்டம், திருவண்ணாமலை தாலுகா, திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில், முதல் பிரகாரம், வடக்குப் புறத்துச் சுவரில் உள்ள சாசனம்.

பதிப்பு : ‘செந்தமிழ்' மூன்றாந் தொகுதி, பக்கம் 432.

விளக்கம் : இவையும், பொன்பரப்பினானான மகதைப் பெருமாளைப் பற்றிய கவிகள்.

சாசனச் செய்யுள்

ஸ்வஸ்திஸ்ரீ பொன்பரப்பினானான மகதைப் பெருமாள் கவி. நாமான் அரவிந்தமான் விந்தமான் முடி நாகர்சென்னிப் பூமான் விரும்பும் புகழ்மக தேசற்குப் போர்வழுதி வாமா னிறையிட்ட வன்னாள் துடங்கிஅவ் வானவர்தம் கோமான் றனதென றிரான் அமராபதிக் குஞ்சரமே. மேருவின்மேல் வென்று கயல்பொறித்த வார்த்தையிலும் வாரிபட வேலெறிந்த வார்த்தையிலும் - கார்விலங்கு முன்னிட்ட வார்த்தையிலுந் தென்னவர் மாகதற்குப் பின்னிட்ட வார்த்தை பெரிது.

1

2

குறிப்பு :- மகதைப் பெருமாளின் யானைணைப் புகழ்கிறது முதற் செய்யுள். பாண்டியன், மகதைப் பெருமாளிடம் தோல்வி யடைந்ததைக் கூறுகிறது இரண்டாவது செய்யுள்.

ஆட்கொண்டான்

இடம் : வடஆர்காடு மாவட்டம், திருவண்ணாமலை தாலுகா, செங்கமா. இவ்வூர் ரிஷபேசுவரர் கோவில், தென்ச் சுவரில் உள்ள செய்யுட்கள்.

பதிப்பு : எண் 121. தென் இந்திய சாசனங்கள், தொகுதி ஆறு. (No. 121. S.I.I. Vol. VII.)