பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

37

விளக்கம் : கண்ணணனூர் ஆட்கொண்டான் என்பவர், முருகன் திருவுருவத்தை இக்கோவிலில் அமைந்ததைக் கூறுகின்றன இச் செய்யுள்.

சாசனச் செய்யுள்

திருவளரும் புயன்தென் கண்ணை ஆட்கொண்ட நாயகனிற் பொருள்வளரும் புவுயிற் பொலிவெய்திப் பொருந்திடவே யுருவளர் தோகையின் மேல்வந் துதித்தெழு ஞாயிறுபோற் கருவளர் கந்தனைக் கற்பித் தடியிணை கண்டனனே.

பெரியுடையார் திருமேனி கல்யாணி திருமேனியாக

நீடுலகில் வாழ நிறைந்து திருவிருக்க நாடிநெதி எய்தி நலந்திகழ - கோடுவளர்

கண்ணனூ ராட்கொண்டான் கந்தனைக் கற்பித்தா

னண்ணல் சிறுவேளன் அறிந்து.

1

2

குறிப்பு:- செய்யுள் 1. கண்ணை கண்ணனூர். செய்யுள் 2.

நெதி - நிதி, செல்வம்.

கோப்பெருஞ் சிங்கனும்

ஆட்கொண்ட தேவனும்

இடம் : வடஆர்காடு மாவட்டம், திருவண்ணாமலை தாலுகா, திருவண்ணாமலை. அண்ணாமலையார் கோவில், முதல் பிரகாரம், மேற்குப் பக்கத்துச் சுவரில் உள்ளது.

பதிப்பு : எண் 69. தென் இந்திய சாசனங்கள், தொகுதி எட்டு. (No. 69. S.I.I. Vol. VIII.)

விளக்கம் : கூடலாளகப் பிறந்தான் கோப்பெருஞ் சிங்கனும் அவன் மகன் ஆட்கொண்ட தேவனும் இந்தக் கோவிலுக்குச் செய்த தான தருமங்களைச் சிறப்பித்துக் கூறுகிறது இந்தச் செய்யுள்.

சாசனச்செய்யுள்

கார்வளர் மேனிக் கமலக் கண்ணன்

பார்வள ருந்திப் பல்லவர் பெருமான்

சகல புவனச் சக்கர வர்த்தி

கூட லவனி யாளப் பிறந்தான்