பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள்:

சாசனச் செய்யுள்கள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள்

ல்

மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் 1959 இல் தொகுத்து வெளியிட்ட சாசனச் செய்யுள் மஞ்சரி என்னும் நூல் இத்தொகுதியில் முதன்மையாக இடம் பெற்றுள்ளது. கல்வெட்டுகள் தொடர்பாக மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் எழுதிய பல்வேறு கட்டுரைகள் இதழ்களில் இருந்து தொகுக்கப்பட்டு இத்தொகுப்பில் சேர்க்கப் பட்டுள்ளன.

1929 இல் மு.இராகவையங்கார் அவர்கள் சாசனத் தமிழ்க்கவி சரிதம் என்ற நூலை தொகுத்து வெளியிட்டார். கல்வெட்டுகளில் காணப்படும் பல்வேறு கவிஞர்களின் தகவல்கள் குறித்ததாக இந்நூல் அமைந்துள்ளது. அக்கவிஞர்கள் எழுதிய செய்யுட்களையும் அவர் சேர்த்து வெளியிட்டுள்ளார். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் புலவர் புராணம் என்ற ஒருநூலை சுவடிகளிலிருந்து தொகுத்து வெளியிட்டதைப் போல் மு.இராகவையங்கார் அவர்கள் கல்வெட்டு களிலிருந்த புலவர்கள் குறித்த தகவல்களைத் தொகுத்து வெளியிட்டார். இம்மரபில், கல்வெட்டுகளில் காணப்பட்ட பல்வேறு செய்யுட்களையும் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் தொகுத்து, கால ஒழுங்கில் அமைத்து, அச்செய்யுட்களில் பேசப்படும் செய்திகள் குறித்து எழுதப்பட்ட நூலே இதுவாகும். மறைந்து போன தமிழ் நூல்கள் என்று (1959) அவர் உருவாக்கியதைப் போன்றதே இந்நூலும் ஆகும்.

மெய்கீர்த்திகள் மற்றும் பல்வேறு செப்பேடுகள் ஆகியவற்றில் உள்ள செய்திகளோடும் இவற்றை இணைத்து புதிய வரலாற்றுத் தகவல்களை வெளிக்கொண்டு வந்துள்ளார். மேலும் பல்வேறு எழுத்து வடிவங்கள் பற்றி அறிவதற்கும் இந்நூல் உதவுகிறது. தென்னிந்திய கல்வெட்டுத் தொகுதிகளில் இருந்து முதன்மையாக இத்தொகுப்பு