பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

-

குறிப்பு :- திருவலத்தே - திருவல்லத்தே. திருவண்ணாழிகை அகநாழிகை; அதாவது கருப்பக்கிருகம். 'திருவண்ணாழிகை உடையார் வசம்' என்பது, கருப்பக்கிருகத்தில் பூசை செய்யும் குருக்களிடம் இந்தத் தர்மம் ஒப்படைக்கப்பட்டது என்பது கருத்து.

குராமரம்

இடம் : செங்கற்பட்டு மாவட்டம், காஞ்சீபுரம் தாலுகா, திருப்பதிக்குன்று கிராமம், திரைலோக்யநாதர் என்னும் ஜைனக் கோவிலின் ஒரு மேடை மீது உள்ள சாசனம்.

பதிப்பு : தென் இந்திய சாசனங்கள், தொகுதி ஏழு, எண் 399. (No. 399, S.I.I. Vol. VII.)

விளக்கம் : இந்தக் கோவிலில் உள்ள குராமரத்தைப் புகழ்கிறது இச்செய்யுள்.

சாசனச் செய்யுள்

தன்னளவிற் குன்றா துயராது தண்காஞ்சி

முன்னுளது மும்முனிவர் மூழ்கியது--மன்னவன்தன் செங்கோல் நலங்காட்டுந் தென்பருத்திக் குன்றமர்ந்த கொங்கார் தருமக் குரா.

குறிப்பு :- குரா என்பது குராமரம். கோரா மரம் என்றும் கூறப்படுகிறது. மும்முனிவர் யாவர் என்பது தெரியவில்லை. மல்லி சேனர் என்னும் வாமன முனிவரும், அவர் சீடர் புஷ்ப சேனரும் இங்கு இருந்தனர் என்பது சாசனங்களினால் தெரிகிறது.

சுந்தரபாண்டியன்

இடம் : தென்ஆர்க்காடு மாவட்டம், சிதம்பரம் தாலுகா, சிதம்பரம் நடராசர் கோவில் கிழக்குக் கோபுர வாயிலின் வலதுபுறச் சுவரில் உள்ளவை.

பதிப்பு : எண் 618. தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு. (No.618. S.I.I. Vol. IV.)