பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

சாசனச் செய்யுள்

இனவ கம்புரி வெண்பிறைக் கோட்டிகல் வெங்கடுங்கட் சின மதத்த வெங்கரிச் சுந்தரத் தென்னவன் தில்லைமன்றில் வனசத் திருவுடன் செஞ்சொற் றிருவை மணந்ததொக்கும் கனகத் துலையுடன் முத்தத் துலையிற் கலந்ததுவே.

55

குறிப்பு :-சுந்தரத் தென்னவன் - சடாவர்மன் சுந்தர பாண்டியன் ஐ. இவன் கி.பி. 1251-1271 வரையில் அரசாண்டான். சிதம்பரக் கோவிலின் மேற்குக் கோபுரத்தை அமைந்தவன் இவன். வனசத் திரு செந்தாமரையில் உள்ள திருமகள். செஞ்சொற்றிரு சொல்லின் செல்வியாகிய கலைமகள்.

சோழகுலவல்லி

டம்: தென்ஆர்க்காடு மாவட்டம், சிதம்பரம் தாலுகா, சிதம்பரம் . நடராசர் கோவில் கிழக்குக் கோபுர வாயிலுக்குள் வலதுபுறச் சுவரில் உள்ளது.

பதிப்பு : எண் 621. தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு. (No.621. S.I.I. Vol. IV.)

விளக்கம்

செய்யுட்களை இயற்றினார்.

திருமூலத்தானமுடையான்

என்பவர் இச்

ச்

சாசனச் செய்யுள்

ஓதுஞ் சகரர் யாண்டோ ரொருபத்தெட்டில் மேலாதி மூலநாளி லானிதனில் - சோதி துளங்கிலமேல் சோழன் சோழகுல வல்லி களங்கமற வைத்தான் கரு.

வண்ணந் திகழுங் கொடியாட மன்னுஞ் சோழ குலவல்லி நண்ணுந் தலைமை யுடையாரை நாமார் புகழப் பாமாலை யெண்ணும் படியில் புகழாளர் என்றே யன்றே யென்னுடைய கண்ணும் பழனக் கழுமலமுங் கலந்தார்த் திருவ மலந்தாரேல்.

1