பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

திருமூலத்தான முடையான்.

குறிப்பு :- சோழகுல வல்லி கோப்பரகேசரி வர்மனான இராஜேந்திர சோழதேவரின் மடைப்பள்ளி உத்தியோகஸ்தன் பெயர்.

விக்கிரம பாண்டியன்

இடம் : தென்ஆர்க்காடு மாவட்டம், சிதம்பரம் தாலுகா, சிதம்பரம் . நடராசர் கோவில் கீழைக்கோபுரத்துத் தெற்குக் கதவுநிலையில் உள்ள செய்யுள்.

பதிப்பு : ‘செந்தமிழ்', நான்காந் தொகுதி : பக்கம் 493.

விளக்கம் : விக்கிரம பாண்டியனின் யானையைப் புகழ்கிறது. சாசனச் செய்யுள்

மீனவற்கு விக்கிரம பாண்டியற்கு வேந்தரிடும் யானை திருவுள்ளத் தேறுமோ - தானவரை

வென்றதல்ல மேனிநிறம் வெள்ளையல்ல செங்கனகக் குன்றதல்ல நாலல்ல கோடு.

குறிப்பு இந்த அரசன் சடையவர்மன் விக்கிரம பாண்டியன் என்பவன். இவன், கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்தவன்.

சுந்தர பாண்டியன்

இடம் : தென்ஆர்காடு மாவட்டம், சிதம்பரம் தாலுகா, சிதம்பரம் . நடராசர் கோவில் கீழைக்கோபுரத்துத் தெற்குக் கதவுநிலையில் உள்ள செய்யுட்கள்.

பதிப்பு : 'செந்தமிழ்', நான்காந் தொகுதி : பக்கம் 492, 493.

விளக்கம் : சுந்தர பாண்டியனின் வெற்றிச் சிறப்பைக்

கூறுகின்றன.