பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

சாசனச் செய்யுள்

மீளா வழிசெல்ல வேணாடர் தங்களை வென்றதடந் தோளான் மதுரைமன் சுந்தர பாண்டியன் சூழ்ந்திறைஞ்சி யாளான மன்னவர் தன்னேவல் செய்ய வவனிமுட்ட வாளால் வழிதிறந் தான்வட வேந்தரை மார்திறந்தே. கொங்க ருடல்கிழியக் குத்தியிரு கோட்டெடுத்து வெங்க ணழலில் வெதுப்புமே - மங்கையர்கண் சூழத் தாமம்புனையுஞ் சுந்தரத்தோள் மீனவனுக் கீழத்தா னிட்ட இறை.

வாக்கியல் செந்தமிழ்ச் சுந்தர பாண்டியன் வாளமரில் வீக்கிய வன்கழற் கண்ட கோபாலனை விண்ணுலகிற் போக்கிய பின்பவன் தம்பியர் போற்றப் புரந்தரசி லாக்கிய வார்த்தை பதினா லுலகமு மானதுவே.

57

1

2

3

குறிப்பு :- சுந்தரபாண்டியன் கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்தவன். வீரகண்ட கோபாலன், கணபதி என்னும் காகதீய அரசர்களை வென்றான். 3-ஆம் செய்யுளில் கூறப்படும் ‘கீழ்கண்ட கோபாலன்' என்பவன், வீரகண்ட கோபாலன் ஆவான்.

நரலோக வீரன்

இடம் : தென்ஆர்காடு மாவட்டம், சிதம்பரம் தாலுகா, சிதம்பரம்

. நடராசர் கோவில் முதல் பிரகாரத்தின் வெளிப்பக்கம், வடபுறச் சுவரில் உள்ளது.

பதிப்பு : எண் 225. தென் இந்திய சாசனங்கள், தொகுதி நான்கு. (No.225. S.I.I. Vol. IV.)

விளக்கம் : இந்தச் செய்யுளுக்கு மேலே வடமொழிச் செய்யுள் களும் உள்ளன. தமிழ்ச் செய்யுட்கள் கூறுவதையே வடமொழிச் செய்யுள்களும் கூறுகின்றன. இச்செய்யுட்கள், முதலாங் குலோத் துங்கச் சோழனின் சேனைத் தலைவனாகிய நரலோகவீரன். திருச் சிற்றம்பலத்தில் செய்த திருத்தொண்டுகளைக் கூறுகின்றன. நரலோக