பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

கம்பன் வீதிவிடங்கன்

இடம் : தென்ஆர்க்காடு மாவட்டம், திருக்கோயிலூர் தாலுகா, கீழுர். இவ்வூர் வீரட்டானேசுவரர் கோவிலின் வடக்குப் புறத்துச் சுவரில்

உள்ள சாசனம்.

பதிப்பு : எண் 880. தென் இந்திய சாசனங்கள், தொகுதி ஏழு. (No.880. S.I.I. Vol. VII.)

விளக்கம் : “திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்” என்று தொடங்குகிற கோவிராஜ பாகேசரி பன்மரான ஸ்ரீ ராஜராஜ தேவரின் 29-ஆவது ஆண்டில் எழுதப்பட்ட ஒரு சாசனத்தின் கீழ் இந்தச் செய்யுள் எழுதப்பட்டிருக்கிறது. ஐயங்கொண்ட சோழபுரத்து மிலாடான ஜனநாத வளநாட்டுக் குறுக்கைக் கூற்றத்துத் திருகோவலூர் வீரட்டான முடைய மகாதேவருக்கு 150 பசுக்கள் தானங் கொடுக்கப் பட்டதை இச் செய்யுள் கூறுகிறது. “பசு ஒன்றுக்கு பாலாழாக்காக நிசதம் பால் பதக்கிருநாழி முழாக்குப் பால் உச்சம்பொழுது பாலாடியருள் இந்தப் பசுக்கள் இக்கோவிலுக்குத் தானங் கொடுக்கப்பட்டன.

சாசனச் செய்யுள்

பாலிக்குங் கோவலூர் சிற்றிங்கூர் மருதூர் பதிமல்லம் பதிற்றுப்பத் தொடுபதிற் றைஞ்சான

காலிக்குப் புணையாகத் திருவுண்ணா ழிகையார் கைக்கொண்டு கறவைஒன் றாலாழாக் காங்கணக்குக் கோலிக்கொள் பால்பதினெண் ணாழிமுழக் குக்கோவல் வீரட்டர்க்கு மஞ்சனமாடக் குடுத்தான்

வேலிக்கோன் திறற்கம்பன் விறல்வீதி விடங்கன் வேந்தர்பிரா னருமொழிக்கு விண்ணப்பஞ் செய்தே.

குறிப்பு பதிற்றுப்பத்தொடு பதிற்றைஞ்சு - நூற்றைம்பது. காலி - பசு. திருவுண்ணாழிகையார் - அகநாழிகையார் (கருப்பக் கிருகத்தார்), அதவாது மூலஸ்தானத்தில் பூசை செய்யும் ஆதி சைவர்கள். குடுத்தான் கொடுத்தான். பழைய சாசனங்களில் இந்தச் சொல் குடுத்தான் என்றே எழுதப்பட்டுள்ளது. வேலிக்கோன் கம்பன்