பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

101

மனமுடைந்து சென்ற மதுபிங்களன், வாழ்க்கையை வெறுத்தவனாய், ஹரிசேனர் என்னும் முனிவரிடம் சென்று துறவு பூண்டான். துறவு பூண்ட மதுபிங்களன் ஒரு நாள் ஓர் ஊரில் வீதியில் பிச்சைக்காகச் சென்றான். அப்போது அவனைக் கண்ட ஒரு சோதிட நூல் வல்லவன் அவனைக் கூர்ந்து பார்த்து, 'இந்த அங்கலக்ஷணங்களையுடைய இவன் அரசபோகத்தில் இருக்கவேண்டியவன். இவன் பிச்சை எடுப்பது வியப்பாக இருக்கிறது. நான் கற்ற சோதிட நூல் பொய் போலும்' என்று கூறித் தன்னிடமிருந்த சோதிட நூலைக் கிழிக்கத் தொடங்கினான். அப்போது அங்கிருந்த ஒருவன் சோதிடனைத் தடுத்து. 'உன்னுடைய சோதிட நூல் பொய்யன்று: உண்மையில் இந்தத் துறவி அரசகுமாரன்தான். சுலசை என்னும் அரசகுமாரி இவனுக்கு மாலை யிடாதபடி தடுத்துத் தனக்கு மாலையிடும்படி சகரராசன் செய்த சூழ்ச்சி யினால் இந்த அரசகுமாரன் துறவு பூண்டு பிச்சை ஏற்கிறான்” என்று கூறி எல்லாச் செய்தியையும் ஆதியோடந்தமாகக் கூறினான்.

66

அவன் கூறியதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த துறவியாகிய மதுபிங்களன், சூழ்ச்சியிலே தான் மோசம் செய்யப்பட்டதை அறிந்தான். தன்னை வஞ்சித்துத் தன் வாழ்க்கையைக் கெடுத்த சகரராசனை எப்படி யாகிலும் அடியோடு நாசம் செய்யவேண்டும் என்று உறுதிகொண்டான். பிறகு மதுபிங்களன். உயிர்நீத்து, மகாகாளன் என்னும் அசுரனாகப் பிறந்து ஒரு கிழப்பிராமண வடிவங்கொண்டு. சகர அரசனை நாசம் செய்யச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது, பர்வதன் என்னும் பெயருள்ள பிராமணன், பிறவியிலேயே மகாமூடனாய் தான் கற்ற கல்வியின் பொருளை நன்குணராதவனாய். பலராலும் இகழப்பட்டு அவமானம் அடைந்து காட்டு வழியே சென்றுகொண்டிருந்தவனை, கிழப் பிராமண வடிவத்துடன் வந்த மகாகாளன் கண்டு கைதட்டிக் கூப்பிட்டான். கூப்பிட்டு, பர்வதனுடைய வரலாறுகளை விசாரித்தான். பர்வதன் தன் வரலாற்றைக் கூறினான்.

பர்வதன் மகாமூடன் என்பதையும், தான் கொண்டதைச் சாதிக்கும் குணம் உள்ளவன் என்பதையும் தெரிந்து கொண்ட மகாகாளன், இவனே தன் எண்ணத்தை நிறைவேற்றத் தகுந்தவன் என்று தேர்ந்து, அவனைப் பலவாறு புகழ்ந்து பேசினான். பர்வதன், மகாகாளன் வயப்பட்டான். பிறகு மகாகாளன் பர்வதனைச் சகரனிடம் அனுப்பி, மிருக இம்சையுள்ள யாகத்தைச் செய்யும்படி செய்து, சுலசையையும் சகரனையும் கொன்று அக்குடும்பத்தையே நாசமாக்கினான்.