பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

சந்திரசூளன், விஜயன் என்னும் வாலிபர் குபேரதத்தை என்னும் மணமகளைக் கவர்ந்து சென்றது பற்றி அவ்விளைஞர்களுக்கு அரசன் கொலைத்தண்டனை கொடுத்தபோது, அத்தண்டனை கடினமானது; அதனைக் குறைக்க வேண்டும் என்று அமைச்சர் முதலானோர் கேட்டுக்கொண்ட சந்தர்ப்பத்தில் கூறியது இச்செய்யுள்.

66

‘பூகம்ப மாக நாகம் பொன்றின வுதிர ஒன்னார்

நாகங்கள் மேகம் போல வீழநண் ணார்கள் சென்னி ஆகங்கள் காகங் கொள்ள அவரோடு மடிந்தி டாதே

சாகின்ற சரகை எம்மைச் சாலவும் வருத்தும் என்றார்.

கொலைத்தண்டனை பெற்ற சந்திரசூளன், விஜயன் என்னும் வாலிபர்களை அமைச்சன் காட்டுக்கு அழைத்துக் கொண்டுபோய், "உங்களுக்கு மரணம் உறுதி; அஞ்சாதீர்கள்” என்று கூறியபோது, அவர்கள் அமைச்சனுக்குக் கூறிது இச்செய்யுள்.

“கம்பித்த காலன் கோலன்

கையன கறங்கு தண்டன்

கம்பித்த சொல்லன் மெய்யைக் கரையழி நரையுஞ் சூடி வெம்பித்தன் னிளமை மண்மேல்

விழுந்தது தேடுவான் போல்

செம்பிற்சும் பிளித்த கண்ணன்

சிறங்கணித் திரங்கிச் செல்வான்.

பர்வதன் என்னும் பிராமணன் காட்டு வழியாகச் சென்றபோது, மகா காளன் என்பவன் வயோதிகப் பிராமண வடிவம் கொண்டு எதிர்ப்பட்ட காட்சியைக் கூறுகிறது இச்செய்யுள்.

66

அலைவட்டங் கிடந்த வல்குற் கதிபதி யாகும் பெற்றி

கலைவட்டங் கிடந்த வல்குற் காரிகைக் கறிவித் தாயேல் முலைவட்டங் கிடந்த முத்த மாலைமென் முறுவ லாளென் சிலைவட்டங் கிடந்த தோளைச் செறிதற்கையுறவு முண்டோ’

சீதையை வசப்படுத்தச் சென்ற சூர்ப்பனகை தன் முயற்சி கை கூடாமல் திரும்பிவந்து இராவணனிடம் சீதையின் கற்பின் உறுதியைக் கூறியபோது, இராவணன் அவளைச் சினந்து கூறியது இச்செய்யுள்.