பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

வான்பழி சுமந்துநின் வளமலர்ச் சேவடி யான்பிரிந் தேதில னிடவயி னிடர்ப்பட மான்பின் ஏகிய மன்னவ னேயெனும்; மாயோன் செய்த மாய மானிடை மாயவன் செய்த மகிழ்ச்சிகண் டருளி ஆவதொன் றின்றி அதன்வழி யொழுகிய நாயக னேயெனை நணுகாய் வந்தெனும்; கொற்றவன் றுணையே குலவிளங் களிறே செற்றவர் செகுக்குஞ் சினத்தீ யுருமே

மைத்துன மலையே மன்னவ னேயெனும்; நாற்கடற் பரந்தன வேற்படைத் தானையொடு கூற்றம் மொய்ம்பிற் கொடுஞ்சிலைத் தடக்கைத் தம்பித் துணைவனிற் றனிப்படப் பிரித்திட் டெம்பெரு மானை யென்வயி னிறுவி மற்றவன் செய்த மாய மானினை

நோற்றி லாதேன் நோக்கிய நோக்கின் அருவினை யேனை அருளிய மனத்தால் மருவிய மாய வுருவுதாற் கெழுந்த

வரிசிலைக் குரிசிலை மன்னர்பெரு மானை மான்மறி தொடர்ந்துசெல் வாளரி போலக் கானெறி விடுத்துக் கடுவனம் புகுத்தி மாயப் புணர்ப்பின் மன்ன வனைநினைந் தாயமுந் தாயருந் தோழியு மின்றியோர் நொதும லாளன் விதிவழி யொழுகி இடனிடை யிட்ட சேய்மைத் தன்றியுங் கடலிடை யிட்ட காப்பிற் றாகிய இலங்கை மூதூ ரிடுசிறைப் பட்டு

மலங்கு விழிமான் வழிதொடர்ந் தருளிய மன்னவற் குற்றதும் இன்னதென் றறியா தின்னற் படவெனை இன்னண மிழைத்த வினையே வலிதே விளிதரல் புரிவாய் மனுவே யனையானை வார ணாசியில் தனியொரு மான்மறி தன்பின் விடுத்தே எனையுத் தனியே இவணிட் டதுவே.