பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

போர்க்குன்றாயிரம்மிசியும் பாழியம் பாயலி னிமிர்ந்தும் பஞ்சவ னென்னும் பெயர்நிறீயும் வளமதுரை நகர் கண்டும் மற்றதற்கு மதிள் வகுத்தும் உளமிக்க மதி அதனா லொண்டமிழும் வடமொழியும் பழுதறத்தா னாராய்ந்து பண்டிதரில் மேந்தோன்றியும் மாரதர் தலைகளத் தவியப் பாரதத்திற் பகடோட்டியும் விஜயனை வசு சாப நீக்கியும் வந்தழியச் சுரம் போக்கியும் வசையில் மாக்கயல் புலிசிலை வடவரை நெற்றியில் வரைந்தும் தடம்பூதம் பணிகொண்டு தடாகங்கள் பல திருத்தி யும் அடும்பசிநோய் நாடகற்றி அம்பொற்சித்ர முயரியும் தலையாலங் கானத்திற் றன்னொக்க விருவேந்தரைக் கொலைவாளிற் றலைதுமித்துக் குறைத் தலையின் கூத்தொழித்தும் மஹாபாரதந் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் மஹாராஜரும் ஸார்வபௌமரும் தம் மகிமண்டலங் காத்திகந்த பின், வில்லவனை நெல்வேலியும் விரிபொழிற் சங்கமங்கைப் பல்லவனையும் புறங்கண்ட பராங்குசப் பஞ்சவர் தோன்றலும்

---

---

இவ்வாறு சின்னமனூர்ப் பெரிய செப்பேட்டுச் சாசனம் கூறுகிறதி லிருந்து, சங்க காலத்தில் மகாபாரதம் தமிழில் எழுதிய செய்தி தெரிகிறது. இந்த மகாபாரதம் இப்போது கிடைக்கவில்லை. அதனைத் தமிழில் செய்த ஆசிரியர் பெயரும் தெரியவில்லை.

4. பெருந்தேவனார் பாரதம்

கடைச்சங்க காலத்திலே இயற்றப்பட்ட பாரதம் மறைந்துவிட்ட தென்று கூறினோம். அதன்பிறகு, வேறு சிலபாரத நூல்கள் இயற்றப் பட்டன. பிற்காலத்து இயற்றப்பட்ட பாரதங்களில் பெருந்தேவனார் என்னும் பெயருள்ள இருவர் பாரதத்தைத் தமிழில் பாடினார்கள். இவ்விரு பெருந்தேவனார்களில் ஒருவர், கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் இருந்தவர். தெள்ளாறெறிந்த நந்திவர்மன் (மூன்றாம் நந்திவர்மன்) என்னும் பல்லவ மன்னன் காலத்தவர்: அந்த அரசனால் ஆதரிக்கப் பட்டவர். இவர் இயற்றிய பாரதம், பாரத வெண்பா என்னும் பெயர் பெற்று வழங்குகிறது. இடையிடையே ஒருசில ஆசிரியப் பாக்களைக் கொண்டு, பெரிதும் வெண்பாவினால் இயற்றப்பட்டது. இது, உத்தியோக பருவம், வீடும பருவம், துரோண பருவம் என்னும் மூன்று பருவங்களையுடையது.

இந்தப் பெருந்தேவனாருக்கு முன்னர் வேறொரு பெருந் தேவனார் இருந்தார். அவரும் பாரதத்தைத் தமிழில் பாடியவர். ஆகவே, பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று கூறப்படுகிறார். இவர் கி.பி.