பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

வானவர் போரிற் றானவர்க் கடந்த

மான வேந்தன் யானையிற் றனாஅது பல்படை நெரிவு தொல்லான் வீமன்

பிறக்கிடங் கொடானதன் முகத்தறிந் தார்த்துத் தானெதிர் மலைந்த காலை யாங்கதன் கோடுழக் கிழிந்த மார்பொடு நிலஞ்சேர்ந்து போர்க்கோள் வளாகந் தேர்த்துக ளனைத்தினு மிடைகொள லின்றிப் புடை பெயர்ந்து புரண்டு வருந்தா வுள்ளமொடு பெயர்ந்தனன்

பெருந்தகை யாண்மையொடு பெயர் தலோ வரிதே.

2

நான்மருப் பில்லாக் கானவில் யானை வீமன் வீழ்த்தியதுடன்றெதிர்த் தாங்கு

மாமுது மதுரை மணிநிறப் பாகனோ டாடமர் தொலைத்த லாற்றான் தேரொடு மைத்துனன் பணியின் வலமுறை வந்து கைத்தலங் கதிர்முடி யேற்றி நிற்றந்

திறைஞ்சின னைவர்க் கிடையோ னதுகண்டு மறந்தீர் மன்னனு மிறைஞ்சித் தனாது

வேழம் விலக்கி வினைமடிந் திருப்பச்

சூர்மருங் கறுத்த நெடுவேள் போல

மலைபுரை யானையுந் தலைவனுங் கவிழிய வாளுகு களத்து வாள்பல வீசி

யொன்னா மன்னரு மாடினர் துவன்றி

யின்னா வின்ப மெய்தித்

தன்னமர் கேளிரு முன்னார்த் தனரே.

மறங்கெழு வேந்தன் குறங்கறுத் திட்டபி னருமறை யாசா னொருமகன் வெகுண்டு பாண்டவர் வேர்முதல் கீண்டெறி சீற்றமோ டிரவூ ரறியாது துவரை வேந்தொடு

மாதுலன் றன்னை வாயிலி னிறீஇக்

காவல் பூட்டி யூர்ப்புறக் காவயி

னைவகை வேந்தரோ டகும்பெறற் றம்பியைக்

கைவயிற் கொண்டு கரியோன் காத்தலிற்

றொக்குடம் பிரீஇத் துறக்க மெய்திய

3