பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

தந்தையைத் தலையற வெறிந்தவ னிவனெனத் துஞ்சிடத் தெழீஇக் குஞ்சி பற்றி

வடாது பாஞ்சால னெடுமுதற் புதல்வனைக் கழுத்தெழத் திருகிப் பறித்த காலைக் கோயிற் கம்பலை யூர்முழு துணர்த்தலிற்

றம்பியர் மூவரு மைம்பான் மருகரு

முடன்சமர் தொடங்கி யொருங்கு களத்தவிய வாள்வாய்த்துப் பெயர்ந்த காலை யாள்வினைக் கின்னோ ரினிப்பிற ரில்லென வொராங்குத் தன்முதற் றாதையொடு கோன்முத லமரர் வியர் தனர் நயந்த விசும்பி

னியன்றதலை யுலகமு மறிந்ததா லதுவே.

5. வத்தசராசன் பாரதம்

3

111

4

திருவாலங்காட்டுக்கோவில் சாசனம் ஒன்று வத்சராசன் என்பவர் இயற்றிய ஒரு பாரதத்தைக் குறிப்பிடுகிறது. திரிபுவன தேவர் என்னும் மூன்றாம் குலோத்துங்க சோழனுடைய 32ஆவது ஆண்டில் எழுதப் பட்ட இந்தச் சாசனம் இதைக் கூறுகிறது. குன்றவர்த்தனக் கோட்டத்து இளத்தூர் நாட்டு அரும்பாக்கத்தில் வாழ்ந்திருந்த அறநிலை வாசகன் திரைலோக்ய மல்லன் வத்சராசன் என்பவர் தமிழில் பாரதத்தைப் பாடினார் என்று இச் சாசனம் கூறுகிறது. வத்சராசனுக்கு அருணிலை விசாகன் என்னும் பெயரும் உண்டு. இது இயற்றப்பட்ட காலம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். இப்போது இந்தப் பாரதம் கிடைக்கவில்லை.

6. குண்டலகேசி

"

சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளை யாபதி என்னும் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகக் குண்டலகேசி கூறப்படுகிறது. இது குண்டலகேசி விருத்தம் எனவும் கூறப்படுகிறது. சமய வாதங்களைக் கூறுகிற நீலகேசி, பிங்கலகேசி, அஞ்சனகேசி, காலகேசி முதலிய கேசி நூல்களில் ஒன்றாகவும் குண்டலகேசி கூறப்படுகிறது. இக்காவியத் தலைவியின் பெயர் குண்டலகேசி ஆகையால், அவள் பெயரே இந்நூலில் பெயராகச் சூட்டப்பட்டது. குண்டலகேசி என்பவள், பகவன் கௌதமபுத்தர் காலத்தில் வாழ்ந்திருந்தவள். இவளுடைய வரலாறு பௌத்த நூல்களாகிய