பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

தேரிகாதை, தம்மபதாட்ட கதா, அங்குத்தர நிகாய என்னும் நூல்களிலும், நீலகேசி என்னும் ஜைனத் தமிழ் நூலிலும் கூறப்படுகின்றது.

இராசகிருக நாட்டு அரசனுடைய அமைச்சனுக்குப் பத்திரை என்னும் பெயருள்ள கன்னிகை இருந்தாள். அவள் தனது மாளிகையில் இருந்தபோது ஒருநாள், அரசசேவகர் கள்ளன் ஒருவனைக் கொலைக் களத்திற்கு அழைத்துச் சென்றதைக் கண்டாள். அக் கள்ளனின் இளமை யையும் அழகையும் கண்ட பத்திரை அவன்மேல் காதல் கொண்டாள். இதனையறிந்த அவள் தந்தையாகிய அமைச்சன் கள்ளனை விடுவித்து, அவனுக்குத் தன் மகன் பத்திரையை மணஞ் செய்வித்தான். அவ்விரு வரும் கணவனும் மனைவியுமாய் வாழ்ந்து வருகிற காலத்து ஒருநாள் ஊடலின்போது, பத்திரை அவனை நோக்கி நீ கள்ளன் அல்லனோ' என்று கூறினாள். அதைக் கேட்டுச் சினங்கொண்ட அவன், பின்பொரு நாள், பத்திரையை அழைத்துக் கொண்டு மலைமேல் ஏறினான். ஏறிய பின், அவளை மேலிருந்து உருட்டிக் தள்ளப்போவதாக கூறினான். நிலைமையை யுணர்ந்த பத்திரை, அவனுக்கு உடன்பட்டவள் போல் நடித்து, “நான் இறப்பதற்கு முன்பு உம்மைவலம் வரவேண்டும்" என்று என்று கூறி, அவனை வலம் வருவதுபோல் பின்சென்று அவனை ஊக்கித் தள்னினாள். அவன் மலையினின்று வீழ்ந்து இறந்தான்.

பிறகு பத்திரை வாழ்க்கையை வெறுத்தவளாய், அலைந்து திரிந்தவள், சமண சமயத்து ஆரியாங்கனைகள் வாழும் மடம் ஒன்றை அடைந்தாள். ஆரியாங்கனைகள், இவள் வரலாற்றையறிந்து, இவளைத் தமது பள்ளியில் சேர்த்துத் தமது சமய நூல்களையெல்லாம் கற்பித்தனர். சமணப் பள்ளியில் சேர்ந்தபோது, ஆரியாங் கனைகளின் வழக்கப்படி, பத்திரையின் தலைமயிர் மழிக்கப்பட்டது. மழிக்கப்பட்ட மயிர், பிறகு வளர்ந்து சுருண்டிருந்தது. ஆகவே, பத்திரை குண்டலகேசி என்று பெயர் பெற்றாள்.

கல்வியைக் கற்றுத் தேர்ந்த பத்திரை, சமயவாதம் செய்யப் புறப் பட்டு, சென்றவிடம் எல்லாம் நாவல் நட்டு, சமயவாதம் செய்துவந்தாள். ஒரு நாள் ஓர் ஊருக்குச் சென்று வழக்கம்போல் நாவற் கிளையை நட்டு வைத்து. ஊருக்குள் பிச்சை ஏற்கச் சென்றாள். அப்போது, கௌதம புத்தரின் மாணவராகிய சாரிபுத்தர் என்பவர் பிச்சைக்காக அவ்வூருக்கு வந்தவர், நாவற்கிளை நட்டிருப்பதைக் கண்டு. அதனைப் பிடுங்கி