பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

நாகசேனர் வரலாறு முதலியன தெரியவில்லை. குண்டலகேசிச் செய்யுள்கள் வீரசோழிய உரையிலும் யாப்பருங்கல விருத்தியுரையிலும் மேற்கோள் காட்டப்பட்டிருப்பதால், இந்நூல்களின் காலமாகிய கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்குமுன் குண்டலகேசி இயற்றப்பட்டிருக்க வேண்டும்.

குண்டலகேசியில், சமண சமயக் கொள்கைகள் மறுக்கப்பட்டிருந்த படியால், அம் மறுப்புகளுக்கு விடையளிப்பதற்காகத் தோன்றியது நீலகேசி என்னும் நூல். குண்டலகேசி என்னும் காவியம் இப்போது மறைந்து விட்டது. அக்காவியத்திலிருந்து சில செய்யுள்கள் மட்டும் கிடைத்துள் ளன. புறத்திரட்டு, வீரசோழிய உரை, நீலகேசி உரை இவைகளில் குண்டலகேசிச் செய்யுள்கள் காணப்படுகின்றன.

குண்டலகேசியில் கலித்துறைச் செய்யுள்களும் விரவியிருந்தன. தெரியாத சொற்களும் அதில் இருந்தன. “குண்டலகேசி முதலான காப்பியமெல்லாம் விருத்தமாம்” என்றும், “குண்டல கேசி... ... முதலாக உடையவற்றிற் றெரியாத சொல்லும் பொருளும் வந்தனவெனின், அகலக்கவி செய்வானுக்கு அப்படியல்லதாகாதென்பது. அன்றியும், அவை செய்தகாலத்து அச்சொற்களும் பொருள்களும் விளங்கி யிருக்கும் என்றாலும் அமையும் எனக் கொள்க” என்றும், வீரசோழிய உரை இந்நூலைப் பற்றிக் கூறுகிறது.

இவை:

புறத்திரட்டு என்னும் நூலில் உள்ள குண்டலகேசிச் செய்யுள்கள்

“உறுப்புகள் தாமுடன் கூடி யொன்றா யிருந்த பெரும்பை மறைப்பில் விழைவிற்குச் சார்வாய் மயக்குவ தேலிவ் வுறுப்புக் குறைத்தன போல வழுகிக் குறைந்து குறைந்து சொரிய வெறுப்பிற் கிடந்த பொழுதின் வேண்டப் படுவது முண்டோ. 'எனதெனச் சிந்தித்த லான்மற் றிவ்வுடம் பின்பத்துக் காமேல் தினைப்பெய்த புன்கத்தைப் போலச் சிறியவு மூத்தவு மாகி நுனைய புழுக்குலந் தம்மா னுகரவும் வாழவும் பட்ட இனைய வுடம்பினைப் பாவி யானென தென்னது மாமோ.

66

இறந்த நற்குணம் எய்தற் கரியவாய்

உறைந்த தம்மையெல் லாமுட னாக்குவான் பிறந்த மூர்த்தியொத் தான்றிங்கள் வெண்குடை அறங்கொள் கோலண்ணல் மும்மத யானையான்.

995

1

2

3