பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

வேண்டில். 45. மற்ற மாமரங்களும். 46. உறங்குதலான். 47. நட்டுச்சோ றவாவுறு. 48. மெய் தீண்டவிலை. 49. தீயுற்றாற் கொடியரும்பு. 50. தோற்ற. 51, ஒப்பவற்றாலே. 52, சேர்த்திட. 53. நேரொத்து வாடுறு. 54 மண்களுங் கற்களும். 55. வந்திங்கு வைகுங்கள். 56 ஒரறிவா முயிர். 57. நின்றாகுந் திரிவாகும். 58. நின்னாற் பிரகாசமே போல். 59. நித்திய குணங்களால்.

60. அநித்திய குணங்களால். 61. குணங்குணி. 62. பலகுணமா. 63. சொல்லேன் யானென்றியே. 64. பரிணமிக்கும் பொருள். 65. பிறந்த கும்மாயம். 66. பயற்றது திரிவாக. 67. தோன்றினவுங் கெட்டனவும். 68. குணியாய் புற்கல 69. புற்கல மிரண்டி 70. அங்கையுள் நெல்லிக்காய் 71. கந்திடத்துக் காணாதாயி. 72. கொல்லேற்றின் கூர்ங்கோடு 73. ஒரு வகையாற் குழக்கன்று மொரு வகையான் முயனாறும். 74. இடக்கை வகையாற். 75. காற்றிறத்தாள் கையில்லை. 76. நீயன்றென்றுரைப்ப. 77. உணராமை காரணத்தால். 78. ஒன்றின தியற்கையால். 79. பிறிதிடத்துள்ள. 80. ஒருகாலத் துளபொருள் 81. நூலிரும்பாய். 82. பிறிதொன்றி னியற்கை. 83. நீயுரைக்கும் வீட்டிடமும். 84, பேர்த்திங்கு வார. 85. உணர்வவர்க்குப் பிறக்குமேல். 86. கருவியால் பொருள்கள். 87. முறையுணரா னென்றியே. 88. உடனாகப் பொருள்களை யொருங்குணர்ந்தான். 89. பொதுவாய குணத்தினால். 90. வரம்பில்லாப் பொருள்களை. 91. எப்பொழுது மறியானேல். 92. யோனிமற் றவர்க்குரை.

7. வளையாபதி

வளையாபதி ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று, (ஐம்பெருங் காப்பியங்களாவன: சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி.) இந்நூல் இப்போது மறைந்து விட்டது. இதன் ஆசிரியர் யார்? எப்போது இயற்றப்பட்டது? இக் காவியத் தலைவன் பெயர் என்ன? காவியத்தின் கதை என்ன? என்பன யாதொன்றும் தெரியவில்லை. இக்காவியத்தின் சில செய்யுள்கள் மட்டும் கிடைத் துள்ளன. இது சமண சமய நூல் என்பதில் ஐயம் இல்லை. சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரும் யாப்பருங்கல விருத்தியுரை காரரும், உரையாசிரியர் நச்சினார்க் கினியரும் இந்நூற் செய்யுள்களைத் தமது உரைகளில் மேற்கோள் காட்டுகின்றனர். புறத்திரட்டு என்னும் தொகைநூலில், இந்நூலிலிருந்து அறுபத்தாறு செய்யுள்கள் தொகுக்கப்பட்டுள்ளன.