பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

மக்கட் பயந்து மனையற மாற்றுதல் தக்க தறிந்தார் தலைமைக் குணமென்ப பைத்தர வல்குற் படிற்றுரை யாரொடு துய்த்துக் கழிப்பது தோற்றமொன் நின்றே. நகைநனி தீது துனிநன்றி யார்க்கும் பகைநனி தீது பணிந்தீயா ரோடும் இவைமிகு பொருளென் றிறத்த லிலரே வகைமிகு வானுல கெய்திவாழ் பவரே.

61

62

பெண்டிர் மதியார் பெருங்கிளை தானது கொண்ட விரகர் குறிப்பினி னஃகுப

வெண்டறை நின்று வெறுக்கை யிலராயின் மண்டினர் போவர்தம் மக்களு மொட்டார்.

63

சொல்லவை சொல்லார் சுருங்குபு சூழ்ந்துணர்

நல்லவை யாரும் நன்மதிப் பாரல்லர்

கல்வியுங் கைப்பொரு ளில்லார் பயிற்றிய

புல்லென்று போதலை மெய்யென்று கொண்ணீ.

64

தொழுமக னாயினுந் துற்றுடை யானைப்

பழுமரஞ் சூழ்ந்த பறவையிற் சூழ்ப

விழுமிய ரேனும் வெறுக்கை யுலந்தாற்

பழுமரம் வீழ்ந்த பறவையிற் போப

65

பொருளில் குலனும் பொறைமையில் நோன்பும்

அருளி லறனும் அமைச்சில் அரசும்

அருளினு ளிட்ட விருண்மையி தென்றே

மருளில் புலவர் மனங்கொண் டுரைப்ப.

66

கீழ்க்காணும் வளையாபதி செய்யுள்களை அடியார்க்கு நல்லார்

சிலப்பதிகார உரையில் மேற்கோள் காட்டுகிறார்:

66

'துக்கந் துடைக்குந் துகளறு காட்சிய

நிக்கந்த வேடத் திருடி கணங்களை

யொக்க வடிவீழ்ந் துலகியல் செய்தபி

னக்கதை யாழ்கொண் டமைவரப் பண்ணி.

1

(சிலம்பு, கனாத்திறம், 13ஆம் அடி, உரை மேற்கோள்)