பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. அந்தாதி மாலை

இலக்கிய நூல்கள்

IV. ஏனைய நூல்கள்

திவாகரம் என்னும் நிகண்டு நூலை இயற்றிய சேந்தன் என்னும் புலவர், தேவியின்மீது அந்தாதிமாலை என்னும் நூலை இயற்றினார். இதனைச் சேந்தன் திவாகரம், செயல் பற்றிய பெயர்த் தொகுதியின் ஈற்றுச் செய்யுளிலிருந்து அறிகிறோம்.

“அண்ணல் செம்பாதிக் காணி யாட்டியைப்

பெண்ணங்கை மூவுலகும் பெற்ற வம்மையைச் செந்தமிழ் மாலை யந்தாதி புனைந்த

நாவல னம்பற் காவலன் சேந்தன்

99

என்பது அச்செய்யுள் அடி சேந்தன் இயற்றிய திவாகர நிகண்டு நமக்குக் கிடைத்திருக்க, அவர் இயற்றிய அந்தாதி மாலை மறைந்துபோனது வருந்தத்தக்கது.

2. அமிர்தபதி

யாப்பருங்கல விருத்தியுரைகாரர் இந்நூலைக் குறிப்பிடுகிறார். “சிந்தாமணி, சூளாமணி, குண்டலகேசி, நீலகேசி, அமிர்தபதி என்றிவற்றின் முதற் பாட்டு வண்ணத்தால் வருவன. அவற்றில் நேரசை முதலாய் வரின் ஓரடி பதினான் கெழுத்தாம். நிரையசை முதலாய் வரின் ஓரடி பதினைந்தெழுத்தாம்” என்று அவர் எழுதுகிறார், (யாப்பருங்கலம், ஒழிபியல் உரை). இதனால், அமிர்தபதியின் முதற் பாட்டு வண்ணச் செய்யுள் என்பது தெரிகிறது. இந்நூலைப் பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை.

3. அந்தாதிக் கலம்பகம்

அகோர முனிவர் என்றும், அகோரசிவத் தியாகராச பண்டாரம் என்னும் பெயருடைய புலவர் கி.பி. 18ஆம் நூற்றாண்டில் இருந்தவர். இவர், திருவாரூர் வன்மீகநாத தேசிகரிடம் தமிழ் பயின்றவர். தேசிகரின் மைந்தரான இலக்கண விளக்கம் வைத்திய நாத தேசிகருக்கு ஆசிரியர்.