பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

அகோர முனிவர் கும்பகோணப் புராணம், திருக்கானப்போர் புராணம், குலதாரணியப் புராணம், முதலிய நூல்களை இயற்றினார். இவர் இயற்றிய அந்தாதிக் கலம்பகம் என்னும் நூலும் வேறு சில நூல்களும் மறைந்துவிட்டன.

4. அளவை நூல்

தர்க்கத்தைப் பற்றிய அளவை நூல் என்னும் பெயருள்ள நூல் ஒன்றிருந்தது என்பதை டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள், தமது “சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்” என்னும் நூலில் குறிப்பிடுகிறார். அவர் எழுதுவது இது:

66

'அளவை நூல் என்று ஒன்று தமிழிலிருந்ததாகப் பழைய உரைகளால் தெரியவருகின்றது: அதிலுள்ள பாடல்கள் கட்டளைக் கலித்துறைகளாக உள்ளன: அந்நூலில் காண்டல் முதல் சம்பவ மிறுதி யாகவுள்ள பத்து அளவைகளின் இலக்கணங்கள் கூறப் பட்டிருத்தல் வேண்டுமென்று கிடைத்த பாடல்கள் தெரிவிக்கின்றன.

இந்நூலைப் பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை.

5., 6., 7. அவினந்தமாலை அரசசட்டம், வருத்தமானம்.

இவை வை கணித நூல்கள், யாப்பருங்கல விருத்தியுரைகாரர் இந்நூல்களைத் தமது உரையில் (ஒழிபியல்) குறிப்பிடுகிறார். அவர் எழுதுவது இது:

“இனி, எண் இரண்டு வகைய, கணிதமும் காரணமும் என. அவற்றுட் கணிதமாவன பதினாறு வரி கருமமும், ஆறு கலாச வருணமும், இரண்டு பிரகரணச் சாதியும், சதகுப்பையும், ஐங்குப்பையும் என்றிப் பரிகருமமும், மிச்சிரகமு முதலாகிய எட்டதிகாரம், அவை அவினந்த மாலையும், அரசசட்டமும், வருத்தமானமும் முதலியவற்றுட் காண்க.

இந்நூல்கள் எக்காலத்தில், யாரால் செய்யப்பட்டன என்பன யாதொன்றும் தெரியவில்லை.

8. அறிவுடைநம்பியார் சிந்தம்

இந்நூலை, யாப்பருங்கல விருத்தியுரைகாரர் குறிப்பிடுகிறார். யாப்பருங்கலம், செய்யுளியல், 40ஆம் சூத்திர விருத்தியுரையில் இவர் எழுதுவது இது: