பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

பட்ட நூல் என்பது தெரிகிறது. இதனை இயற்றியவர் செயங்கொண்டார் என்னும் புலவர். இவர், கலிங்கத்துப் பரணி பாடிய செயங்கொண்டாராக இருக்கலாம். அப்படியானால், இந்நூல் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாதல் வேண்டும். இந்த நூல் இப்போது மறைந்துவிட்டது. 12. இராசராச விஜயம்

இராசராசன் என்னும் சோழ அரசனின் வரலாற்றைக் கூறுகிற நூல் போலும் இது. இந்நூலை இயற்றியவர் நாராயண பட்டாதித்தியன் என்பவர். விசேட காலங்களில் இந்நூலைப் பொதுஜனங்களிடையே படிப்பதற்காக இவருக்கு நிலம் தானம் செய்யப்பட்டது. இந்நூலைப் பற்றியும், இதன் ஆசிரியரைப்பற்றியும் வேறு செய்திகள் தெரிய வில்லை, இது நாடக நூலாக இருக்குமோ?

13. இராமாயண வெண்பா

1

இராமாயண வெண்பா என்னும் பெயருள்ள நூல் ஒன்று கி.பி. 12ஆம் நூற்றாண்டுக்கு முன்பு இயற்றப்பட்டிருந்தது என்பது யாப்பருங் கல விருத்தியுரையினால் தெரிகிறது. யாப்பருங்கலம், செய்யுளியல், 9ஆம் சூத்திர உரை இவ்வாறு கூறுகிறது: “இன்னும் பல வடியால் வந்த பஃறொடை வெண்பா இராமாயணமும், புராண சாகரமும் முதலாக வுடைய செய்யுட்களிற் கண்டுகொள்க." இந்த இராமாயணத்தில் பஃறொடை வெண்பாக்களும் இருந்தன என்பது இதனால் தெரிகிறது. ஆனால், இவ்வுரையாசிரியர் இந்த இராமாயணத்திலிருந்து ஒரு செய்யுளையேனும் மேற்கோள் காட்டவில்லை.

வீரசோழியம் பொருட்படலம், 'வேந்தன் சிறப்பு' என்று தொடங்கும் 18ஆம் செய்யுள் உரையில் இரண்டு இராமாயண வெண்பாக்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அவை யாப் பருங்கல உரையில் கூறப்படுகிற இராமாயண நூலிலிருந்து மேற்கோள் காட்டப் பட்டவை என்று கருதப்படுகின்றன. அவைகளாவன:

மற்றிவனை மாலென் றறிந்தாலவ் வாளரக்கன் பெற்றி கருதுவதென் பேதையர்காள்-மற்றிவன்றன் கண்டான் கடைசிவத்தற் குண்டோ கடலிலங்கை வண்டா ரரக்கன் வலி.

1