பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

139

ஐயிருப தோசனையு மாங்கோ ரிடனின்றிக் கைபரந்த சேனைக் கடலொலிப்பத்-தையல் வழிவந் திராமன் வடகரையா னென்றான் வழிவந்து வேறாக மீட்டு.

2

சென்னை அரசாங்கக் கீழ்நாட்டுக் கையெழுத்து நூல் நிலையத்தில் உள்ள ‘பலதிரட்டு' என்ற ஓலைச்சுவடியில் இராமாயண வெண்பா என்னுந் தலைப்பில் கீழ்க்காணும் நான்கு வெண்பாக்கள் காணப்படுகின்றன. இந்த இராமாயண வெண்பாக்கள் யாப்பருங்கல விருத்தியுரை கூறுகிற நூலைச் சேர்ந்தவையா இல்லையா என்பது தெரியவில்லை. அவ்

வெண்பாக்களாவன:

சனகன்மொழி கேட்டுத் தவமுனிவன் சொன்னான்

தினகரனால் தெய்வக் குலத்தோன் - மனமகிழ வந்தசிறுச் சேவகனை மன்னா அறியீரோ

இந்தவகை என்னினைந்தீ ரென்று.

தயரதனும் புத்திரருந் தாமரையோன் பெற்ற நயமுனியுந் தானையுட னண்ணச் - சுயமுடைய கோதமன்றன் புத்திரனைக் கொண்டு மிதிலேசன் ஏதமிலான் வந்தா னெதிர்.

வசிட்டனுங் கோசிகனு மன்னவருங் கூடி

சகிக்குநிகர்

மாமுகத்துச் சீதைக்கும் வாழு முருமிளைக்கும்

விசித்திரமா மங்கலச்சொல் விண்டு

மாமுகுர்த்த மிட்டார் மகிழ்ந்து.

சூரியனார் வம்சத் துதித்த தயரதனா

மாரியனை யிங்கே யழைமினென்றான் - மூரி வளைக்குலங்கள் மூன்றினொரு மாமுத்த மீன்று திளைக்கு மிதிலையர்கோன் றேர்ந்து.

14. இரும்பல் காஞ்சி

1

2

3

4

இப்பெயருள்ள நூல் ஒன்று இருந்தது என்பதைத் தக்கயாகப் பரணி உரையினாலும் புறத்திரட்டினாலும் அறிகிறோம். தக்கயாகப் பரணி உரையாசிரியர் இந்நூலிலிருந்து இரண்டு செய்யுள்களை மேற்கோள் காட்டுகிறார். அவை: