பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

“எய்கணை விழுந்துளை யன்றே செவித்துளை

மையறு கேள்வி கேளா தோர்க்கே.

1

(தக்கயாகப் பரணி, கோயிலைப் பாடினது, 55ஆம் தாழிசை உரை மேற்கோள்)

66

‘பருதிக் கருவின் முட்டைக் கதிர்விடும்

பெருங்குறை வாங்கி வலங்கையிற்

பூமுத லிருந்த நான்முகத் தனிச்சுடர்

வேதம் பாடிய மேதகப் படைத்தன

எண்பெரு வேழம்.

2

(தக்கயாகப் பரணி, காளிக்குக் கூளி கூறியது, 22ஆம் தாழிசை உரை மேற்கோள்)

இரும்பல் காஞ்சியிலிருந்து மூன்று செய்யுள்களைப் புறத்திரட்டில் தொகுத்திருக்கிறார்கள். அச் செய்யுள்கள் பின்வருவன:

66

'நீல நெடுங்கொண்மூ நெற்றி நிழனாறிக்

66

காலை யிருள்சீக்குங் காய்கதிர்போல்-கோல

மணித்தோகை மேற்றோன்றி மாக்கடற்சூர் வென்றோன் அணிச்சே வடியெம் அரண்.

'ஆர்கலி ஞாலத் தறங்காவ லாற்சிறந்த

பேரருளி னாற்குப் பெறலருமை யாதரோ

வார்திரைய மாமகர வெள்ளத்து நாப்பண்ணும்

99

1

போர்மலைந்து வெல்லும் புகழ்.

66

'கருங்கலி முந்நீரின் மூழ்காத முன்னம்

இருங்கடி மண்மகளை யேந்தினவே யாயிற் பெரும்பெய ரேனத் தெயிறனைய வன்றே

2

சுரும்பறை தொண்டையான் தோள்.

இந்நூலைப் பற்றிய ஏனைய செய்திகள் தெரியவில்லை. 15. இளந்திரையம்

3

இப்பெயருடைய நூலை, ஆசிரியர் மயிலைநாதர், நன்னூல் உரையில் குறிப்பிடுகிறார். “செய்வித்தோனாற் பெயர் பெற்ற சாதவாகனம், இளந்திரையம் முதலாயின" என்று அவர் எழுதுகிறார்.