பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

வாடுந் நாடகமுஞ் செய்தாற்கு சிறப்பாம் பாலை யூரினி லிருபூவும் விளையும் ஒருமாநன்னில பருங்கொழு கிளையினொடு மூழிதொறு மிறை யிலியே யுரைத்தா னேய்.4

143

சிதைந்து காணப்படுகிற இந்தச் செய்யுளினால் அறியப் படுவது என்ன வென்றால், வீரைத்தலைவன் பரசமய கோளரியார் என்பவர் கன்னிவன புராணம், அஷ்டதச புராணம், பூம் புலியூர் நாடகம் என்னும் மூன்று நூல்களை இயற்றினமைக்காகப் பாலையூரில் நிலம் இறையிலியாகத் தானம் பெற்றார் என்பது.

இந்த நூல்கள் இப்போது கிடைக்கவில்லை.

20. கலைக்கோட்டுத் தண்டு

66

இடுகுறியாற் பெயர் பெற்றன நிகண்டு, கலைக்கோட்டுத் தண்டு முதலாயின” என்று மயிலைநாதரும் (நன்னூல், பாயிரம், 48ஆம் சூத்திர உரை), “இடுகுறியாற் பெயர் பெற்றன நிகண்டு, நூல், கலைக்கோட்டுத் தண்டென இவை” என்று இறையனார் அகப்பொருளுரையாசிரியரும் எழுதுவதிலிருந்து இப் பெயரையுடைய நூல் ஒன்று இருந்தது என்பது தெரிகிறது. நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் என்னும் புலவர் சங்ககாலத்தில் இருந்தார். அவர்பாடிய செய்யுள் ஒன்று நற்றிணையில் 382ஆம் பாட்டாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது.

இந் நூலாசிரியரைப் பற்றிப் பின்னத்தூர் அ. நாராயணசாமி அய்யர் அவர்கள் தாம் பதிப்பித்த நற்றிணை என்னும் நூலில், பாடினோர் வரலாறு என்னும் பகுதியில் இவ்வாறு எழுதுகிறார்:

"மான்கொம்பை நிமிர்த்திக் கைக்கோலாகக் கொண்டமை யால், இவர் கலைக்கோட்டுத் தண்டனெனப்பட்டார். இவரது இயற்பெயர் புலப்படவில்லை. நிகண்டன் என்ற அடைமொழியால் இவர் தமிழில் நிகண்டடொன்று செய்தாரென்று தெரிகிறது: அதுவே கலைக்கோட்டுத் தண்டமெனப்படுவது. இதனை இடுகுறிப் பெயரென்று கொண்டார் களவியலுரைகாரரும், நன்னூல் விருத்தியுரைகாரரும். அஃது

இதுகாறும் வெளிவந்திலது.

நிகண்டுநூல் செய்தபடியால் நிகண்டன் என்று பெயர் பெற்றார் என்பது தவறு. அப்படியானால், நிகண்டாசிரியர் எனப்படுவாரேயன்றி நிகண்டன் எனப்படார். நிகண்டன் என்பது சமண சமயத்தவர் என்பது