பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

பொருள். கலைக்கோட்டுத் தண்டம் என்பது, மான்கொம்பைக் கைக் கோலாகக் கொண்டதால் பெற்ற பெயர் அன்று. அது ஓர் ஊரின் பெயர் எனத் தோன்றுகிறது. சமதண்டம் என்பதுபோல் கலைக்கோட்டுத் தண்டம் என்பது ஓர் ஊரின் பெயராதல் வேண்டும். 'கலைக்கோட்டுத் தண்டு' என்னும் நூல் இப்போது கிடைக்கவில்லை.

21. காங்கேயன் பிள்ளைக்கவி

இராமநாதபுரம் மாவட்டம், திருப்பத்தூர் தாலூகா, பெரிச்சிக் கோவில் என்னும் ஊரில் உள்ள சுந்தரவனேசுவரர் கோவில் சாசனம் ஒன்று காங்கேயன் பிள்ளைக்கவி என்னும் நூலைக் குறிக்கிறது.

5

பாண்டியன் மாறவர்மன் ஆன திரிபுவன சக்கரவர்த்தி சுந்தரபாண்டியதேவரின் 14ஆவது ஆட்சி ஆண்டில் இந்தச் சாசனம் எழுதப்பட்டது. கந்தன் உதயஞ் செய்தான் காங்கேயன் என்னும் சிற்றரசன்மீது பிள்ளைக்கவி (பிள்ளைத் தமிழ்) நூலைக் கொடி கொண்டான் பெரியான் ஆதிச்சதேவன் என்னும் புலவர் பாடியதையும், அதற்காக காங்கேயன் இப்புலவருக்குச் சாத்தனேரி என்னும் ஊரில் நிலம் பரிசளித்ததையும் இந்தச் சாசனம் கூறுகிறது.

இந்தச் சாசனம் கூறுகிற பாண்டியன் கி.பி. 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவன். ஆகவே, காங்கேயனும், அவனைப் பாடிய ஆதிச்சதேவரும் அதே காலத்தில் இருந்தவர் ஆவர்.

இப்பிள்ளைக்கவி இப்போது கிடைக்கவில்லை.

22. காசியாத்திரை விளக்கம்

கி.பி. 18ஆம் நூற்றாண்டில், யாழ்ப்பாணத்து மாதகல் என்னும் ஊரில் இருந்த மயில்வாகனப் புலவர் இயற்றியது இந்நூல். மயில்வாகனப் புலவர், கூழங்கைத் தம்பிரானிடம் கல்வி பயின்றவர். இவர் இயற்றிய காசியாத்திரை விளக்கமும் ஞானாலங்கார நாடகமும் மறைந்துவிட்டன. 23, 24. கிளிவிருத்தம், எலிவிருத்தம்

கி.பி. 7ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த திருஞான சம்பந்தர் தமது திருவாலவாய்ப் பதிகத்தில் இந்த இரண்டு நூல்களைக் குறிப்பிடுகிறார்.

66

“கூட்டி னார்கிளி யின்விருத்த

முரைத்த தோரெலி யின்தொழிற்