பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

6

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

அரங்கேற்றினார் என்றும், அதன்பொருட்டு இவருக்கு அவ்வூரில் நிலம் தானம் செய்யப்பட்டதென்றும் ஒரு சாசனம் கூறுகிறது. திரிபுவனி சதுர் வேதி மங்கலம், இப்போது திரிபுவனி என்னும் பெயருடன் புதுச்சேரிக்கு அருகில் இருக்கிறது.

இந்நூலாசிரியரைப் பற்றியும் இந்நூலைப் பற்றியும் வேறு

செய்திகள் தெரியவில்லை.

26. கோட்டீச்சர உலா

கோட்டீச்சர உலாவிற்குக் கொட்டையூருலா என்றும் வேறு பெயர் உண்டு. கோட்டீச்சரம் என்பது கொட்டையூர். இவ்வூர் கும்ப கோணத்திற்கு அருகில் இருக்கிறது. கோட்டீச்சர உலாவை இயற்றியவர் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் என்பவர்.

இவர் முத்தமிழ்ப் புலவர். தஞ்சையை அரசாண்ட மகாராட்டிர அரசரான சரபோஜி மகாராஜாவின் (1798-1832) அரண்மனைப் புலவராக இருந்தவர். தஞ்சையில் சரஸ்வதிமகால் என்னும் பெயருடன் சரபோஜி மன்னர் அமைத்த புத்தகசாலைக்கு இவர் ஏட்டுச்சுவடிகளைத் தேடிக் கொடுத்தார். பின்னர், சென்னை அரசாங்கத்தார் அக்காலத்தில் நடாத்தி வந்த சென்னைக் கல்விச் சங்கத்தில் தமிழாசிரியராக இருந்தார்.

கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் கோட்டீச்சரக் கோவை, தஞ்சைப் பெருவுடையாருலா, சரபேந்திர பூபால குறவஞ்சி, திருவிடை மருதூர்ப் புராணம், பெருமண நல்லூர்ப் புராணம், பல தனிச் செய்யுள்கள் முதலியவைகளை இயற்றினார்.

இவர் இயற்றிய கோட்டீசர உலா இப்போது கிடைக்க வில்லை; மறைந்துவிட்டது.

27. “கோலநற்குழல்” பதிகம்

தொண்டைநாட்டுத் திருமால்புரத்தில் எழுந்தருளியுள்ள கோவிந்தப்பாடி ஆழ்வார் என்னும் பெருமாள்மீது, “கோல நற்குழல்” எனத் தொடங்கும் பதிகத்தை ஒருவர் பாடினார். அவர் பெயர் தெரியவில்லை. அவருடைய மகன், மூவேந்தபடவூர் வேளார் என்னும் சிறப்புப் பெயருள்ள குளக்கடையான் அருநிலை ஸ்ரீ கிருஷ்ணன் என்பவன். மேற்படி பதிகத்தை மேற்படி கோவில் உற்சவ காலத்தில் ஓதுவதற்குப் பொன்னைத் தானம் செய்தான் என்று, இராஜராஜ கேசரி பன்மர் என்னும்