பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

நாத னங்கெழுந் தருளவந் தடிதொழு நவிறி

ஏது நின்னுளத் தெண்ணிய தெனமனு விசைப்பான். ஊழி நான்குநீ மகவென வுதித்திட வேண்டி ஆழி யங்கையாய்; புரிந்ததித் தவமென வறைய வாழி மன்னவ வருதுநின் மனைவியு நீயும் பாழி மாநிலத் திம்முறை வருகெனப் பணித்தான். இருந்த வச்சம தக்கினி ரேணுகை யிமையோர் மருந்தெ னத்தகு கோசலை தயரதன் மதிகால் திரிந்து நல்வசு தேவனற் றேவகி சுசீலை

பொருந்து கோமக னெனவரு வீர்களிப் புவிமேல்.

29. சாதவாகனம்

1

2

3

இப்பெயரையுடைய நூலை, உரையாசிரியர் மயிலை நாதர், நன்னூல் உரையில் குறிப்பிடுகிறார். “செய்வித்தோனாற் பெயர் பெற்றன, சாதவாகனம் இளந்திரையம் முதலாயின” என்று அவர் எழுதுகிறார் (நன்னூல், பாயிரம், 48ஆம் சூத்திர உரை). “செய்வித் தானாற் பெயர் பெற்றன சாதவாகனம் இளந்திரையமென இவை” என்று இறையனார் அகப்பொருளுரையாசிரியர் கூறுகிறார். இந்நூலைப்பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

30. சாந்தி புராணம்

சாந்தி புராணம் என்னும் பெயருள்ள நூல் ஒன்று இருந்தது என்பதை, அப்புராணத்திலிருந்து ஒன்பது செய்யுள்கள் புறத்திரட்டு என்னும் நூலில் தொகுக்கப்பட்டிருப்பதிலிருந்து அறியலாம். இது சமண சமய நூல், இப்போது இந்நூல் மறைந்துவிட்டது.

சாந்தி புராணம் என்பது சாந்திநாதர் என்பவருடைய வரலாற்றைக் கூறும் நூல், சாந்திநாதர், ஜைனருடைய இருபத்துநான்கு தீர்த்தங் கரர்களுள் பதினாறாவது தீர்த்தங்கரர் ஆவார். இவருடைய வரலாறு ஸ்ரீபுராணம் என்னும் மணிப்பிரவாள வசன நூலிலும், திரிசஷ்டி சலாகபுருஷ சரித்திரம் (அறுபத்துமூன்று பெரியார் சரித்திரம்) என்னும் நூலிலும் கூறப்பட்டுள்ளது.

அஸ்தினபுரத்துக் குருவம்சத்தில் அரச குமாரனாய்ப் பிறந்து சக்கரவர்த்தியாக விளங்கிப் பின்னர் துறவுபூண்டு கேவலஞானம்