பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

149

பெற்றுத் தீர்த்தங்கரராய் வாழ்ந்து ஜைன மதத்தை உலகத்திலே பரவச் செய்து இறுதியில் மோட்சமடைந்தார். சாந்திநாதர்.

இவருடைய சரித்திரத்திலே இவருடைய பதினொரு முற்பிறப்பு வரலாறுகள் கூறப்படுகின்றன. பரத கண்டத்தில் இரத்தினபுரத்தின் அரசனாக ஸ்ரீசேனன் என்னும் பெயருடன் முதலில் பிறந்தார். பிறகு உத்தரகுருவில் பிறந்தார். அங்கிருந்து தேவலோகத்தில் தேவனாய்ப் பிறந்தார். பிறகு இரதநூபுரத்து அரச குடும்பத்தில் அமிததேஜஸ் என்னும் அரசனாகப் பிறந்தார். பின்னர் நந்திதாவர்த்த தேவலோகத் திலே மீண்டும் தேவனாய்ப் பிறந்தார். பிறகு, மீண்டும் பரத கண்டத்திலே சுபா நகரத்து அரச குடும்பத்திலே அபராஜிதர் என்னும் அரசனாய்ப் பிறந்தார். இந்தப் பிறப்புக்குப் பிறகு அச்சுத தேவலோகத்திலே இந்திரனாய்ப் பிறந்தார். பின்னர், மீண்டும் இரதன சஞ்சய நகரத்திலே வச்சிராயுதர் என்னும் அரசனாய்ப் பிறந்தார். பிறகு ஒன்பதாவது பிறவி யிலே அகமிந்திர தேவனாய்த் தேவலோகத்திலே பிறந்தார். மீண்டும், பத்தாவது பிறவியிலே புண்டரீகினி நகரத்திலே அங்கிருந்து சர்வார்த்த சித்தி என்னும் தெய்வலோகத்தில் தேவனாய்ப் பிறந்தார். கடைசியாக, முன்னமே கூறியதுபோல, அஸ்தினபுரத்திலே சாந்திநாதர் என்னும் பெயருள்ள அரசனாய்ப் பிறந்து, சக்கரவர்த்தியாய் விளங்கி, இறுதியில் தீர்த்தங்கரராய் வாழ்ந்து வீடுபேறடைந்தார்.

இவருடைய முற்பிறப்புச் செய்திகள் இவருடைய வரலாற்றில் மிக விரிவாகக் கூறப்படுகின்றன. சாந்தி புராணமும் இந்த வரலாறுகளைக் கூறுகிற நூலாக இருக்க வேண்டும். சாந்தி புராணத்தைப் பாடிய புலவர் யார், அவர் எந்தக் காலத்தில் இருந்தார் என்பன தெரியவில்லை. இப்புராணம் இப்போது மறைந்துவிட்டது. இந்நூலிலிருந்து நமக்குக் கிடைத்திருப்பவை ஒன்பது செய்யுள்களே. இச்செய்யுள்கள் புறத் திரட்டு என்னும் நூலில் தொகுக்கப் பட்டுள்ளன என்று முன்னமே கூறினோம். இச்செய்யுள்கள் இனிமையாக உள்ளன:

ஆயிரங் கதிருடை யருக்கன் பாம்பினால் ஆயிரங் கதிரொடும் மழுங்கக் கண்டுகொல் ஆயிரங் கண்ணுடை யமரர் கோனுமோர்

ஆயிரம் அமைச்சர்சொல் வழியின் ஆயதே.

1

நாயும் போல்வர்பல் லெச்சில் நச்சலால் தீயும் போல்வர்செய்ந் நன்றி சிதைத்தலால்