பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

36. தண்டகாரணிய மகிமை

155

கி.பி. 1768ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சிவசிவ வெண்பா என்னும் நூலின் 9ஆம் செய்யுள் ‘விருந்தோம்பல்' என்பதற்கு அந்நூல் உரையாசிரியர், இந்நூலிலிருந்து இரண்டு செய்யுள்களை மேற்கோள் காட்டுகிறார். அவர் எழுதுவதாவது:

"இதற்குப் பிரமாணம், தண்டகாருணிய மகிமையில் சுகேது வென்னும் ராசா அன்னமிடாமையின் தன் உடம்பைத் தானே தின்றானென்னுங் கதை:

‘அன்ன மீகலான் சுகேதுவென் பவன்விசும் படைத்தும் தன்ன தாகிய வுடறினு மதுதவிர்ந் திடயாம்

மன்னி யன்னமீந் தனமவன் றருமணிக் கடகம் உன்ன தாகவென் றிராகவற் ககத்திய னுதவ.

வாங்கி மாதவன் சொற்றவை கேட்டக மகிழ்ந்து பூங்க ழற்றொழு தருள்விடை கொண்டனன் போந்து தேங்கு தண்புன லயோத்தியை நோக்கினன் சென்றான் பாங்கர் சேனையுந் தலைவருங் குழீஇயினர் பாவ.

இதனால் இப்பெயருள்ள நூல் ஒன்று இருந்ததென்பது தெரிகின்றது. 37. தன்னை யமகவந்தாதி

1

2

இருந்த

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காரைத் தீவில் முருகேசையர் (1774 -1830) இயற்றியது தன்னை யமக வந்தாதி என்னும் நூல். இந்த நூலும், இவர் இவற்றிய குருக்ஷேத்திர நாடகம், தன்னை நாயகரூஞ்சல் என்னும் நூல்களும் மறைந்துவிட்டன.

38. திருக்காப்பலூர் குமரன் உலா

வட ஆர்க்காடு மாவட்டத்தில் காப்பலூர் என்னும் ஊர் இருக்கிறது. இவ்வூர் திருக்காமேசுவரர் கோவிலில் உள்ள கல்லெழுத்துச் சாசனம், திருக்காமி, அவதானியார் என்பவர் குமரக் கடவுள்மீது உலா பாடிய செய்தியைக் கூறுகிறது. திருக்காமி அவதானியார் உலா பாடியமைக் காகவும், திருக்காமீசுவரர் கோவிலில் விழா ஏற்படுத்தி யமைக்காகவும் அவருக்குக் கோயில் அதிகாரியும், அப்பையன் என்பவரின் காரியஸ்த ரான சொக்க பிள்ளை ஐயன் என்பவரும் சேர்ந்து நூறு குழிநிலத்தைத் தானமாகக் கொடுத்ததை இந்தச் சாசனம் கூறுகிறது. இந்தச் சாசன எழுத்து கி.பி. 18ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகத் தெரிகிறது.