பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

இளமையும் எழிலும் இராச விபூதியும்

வளமையும் கிளைமையும் மறித்து நோக்குதற்கு

நிறுத்துதல் அருமையை நிறுத்திய திதுஎன

வெறுத்துடன் விடுத்தனன் வினைப்பயன் யாவையும்.

99

இது வைசிரவண அரசன் ஆலமரம் அழிந்ததைக் கண்டு அதன் மூலம் நிலையாமை யுணர்ந்ததைக் கூறுகிறது.

இது அகவற்பாவாலான நூல் எனத் தோன்றுகிறது. இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

61. மாடலம்

இப்பெயரையுடைய நூல் ஒன்றிருந்தது என்பது தக்கயாகப் பரணி உரையினால் தெரிகிறது. மாடலனார் என்பவர் இயற்றியபடியினாலே இந்நூலுக்கு இப்பெயர் வாய்த்தது என்று கருதலாம். தக்கயாகப் பரணி, காளிக்குக் கூளி கூறியது. 13ஆம் தாழிசை உரையில், உரையாசிரியர் இந்நூற் செய்யுள் ஒன்றை மேற்கோள் காட்டுகிறார். அது:

66

"கழிந்துவளர் கிழமையி லொழிந்த வூழி

யொன்பதிற் றிரட்டி யொருமுறை செல்ல நன்கென மொழிவன நான்கே - நான்கிலு முதலது தொடங்கிய நுதல்விழிப் பெரியோன் கடகக் கங்கணப் படவரவு

பூட்டு மச்சிலை வளைத்த பொழுதே.

இது, மாடலம்.”

இந்த நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

62. மார்க்கண்டேயனார் காஞ்சி

குணசாகரர் என்னும் உரையாசிரியர் யாப்பருங்கலக் காரிகை உரையில் இந்நூலைக் குறிப்பிடுகிறார். குறிப்பிடுவதோடு, இந்நூற் செய்யுள் ஒன்றினை மேற்கோள் காட்டுகிறார். குணசாகரர் மேற்கோள் காட்டுகிற இந்தச் செய்யுளையே இளம்பூரண அடிகளும் தமது தொல் காப்பிய உரையில் (பொருள், செய்யுளியல், 230ஆம் சூத்திர உரை) மேற்கோள் காட்டுகிறார். ஆனால், அவர், இச்செய்யுள் எந்நூலைச் சேர்ந்தது என்பதைக் குறிப்பிடவில்லை. குணசாகரர் கூறியதிலிருந்து இச்செய்யுள் மார்க்கண்டேயனார் காஞ்சியில் உள்ளது என்பது தெரிகிறது. அச்செய்யுள் பின்வருவது: