பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

66

---

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

கோப்பரகேசரிவர்மரான உடையார் ஸ்ரீராஜராஜேஸ்வர தேவற்கு யாண்டு ஆறாவது. உடையார் ஸ்ரீ ராஜராஜேஸ்வர முடையார் கோயிலில் ராஜராஜேஸ்வர நாடகமாட நித்த நெல்லுத் தூணியாக நிவந்தஞ் செய்த நம் வாய்க் கேழ்விப்படி சாந்திக் கூத்தன் திருவாலன் திருமுதுகுன்றனான விஜயராஜேந்திர ஆசார்யனுக்கும் இவன் வர்க்கத் தார்க்கும் காணிக்கையாகக் குடத்தோமென்று ஸ்ரீ கார்யக் கண்காணி செய்வார்க்கும் கரணத்தார்களுக்கும் திருவாய்மொழிந்தருளித் திரு மந்திர வோலை உதாரவிடங்க விழுப்பரையர் எழுத்தினால் யாண்டு நாலாவது நாள் திருமுகம் பிரசாதம் செய்தருளி வந்தமையிலும் இவன் காணி அனுபவித்துவருகிற படியே ஸ்ரீ ராஜராஜேஸ்வரமுடையார் கோயிலிலே கல்வெட்டுவித்துக் குடுக்கவென்று கல் வெட்டியது.

66

“திருவாலன் திருமுதுகுன்றனான விஜயராஜேந்திர ஆசாரியன் உடையார் வைய்காசிப் பெரிய திருவிழாவில் ராஜராஜேஸ்வர நாடகமாட இவனுக்கும் இவன் வர்க்கத்தார்க்கும் காணியாகப் பங்கு ஒன்றுக்கும் ராஜராஜேஸ்வரியோ டொக்கும் ஆடவலா னென்னும் மரக்காலால் நித்த நெல்லுத் தூணியாக நூற்றிருபதின் கல நெல்லும் ஆட்டாண்டு தோறும் தேவர் பண்டாரத்தேய் பெறச் சந்திராதித்தவற் கல் வெட்டித்து

992

இராஜராஜ நாடகம் தொன்றுதொட்டுத் தொடர்ந்து நடிக்கப்பட்ட தென்பதும், பிற்காலத்தில் தஞ்சாவூரை மராட்டியர் ஆண்ட காலத்தில் இந்நாடகம் நிறுத்தப்பட்டு இதற்குப் பதிலாக சரபோஜி நாடகம் என்னும் ஒரு நாடகம் நடிக்கப்பட்டதென்பதும் தெரிகின்றன.

3. காரைக் குறவஞ்சி

இந்நூலை இயற்றியவர், யாழ்ப்பாணத்துக் காரைத் தீவில் இருந்த சுப்பையர் என்பவர். இவர் கி.பி. 1795இல் இருந்தவர் என்பர். இவர் தமிழ், தெலுங்கு வடமொழிகளைக் கற்றவர். இவர் இயற்றிய காரைக் குறவஞ்சி மறைந்து போயிற்று.

4. குணநூல்

இது ஒரு நாடகத்தமிழ் நூல். இதனை, அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் குறிப்பிடுகிறார்.

“பின்னும் முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றிய மென்பன வற்றுள்ளும் ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணை யல்லது முதல் நடு இறுதி காணாமையின், அவையும் இறந்தன போலும்” என்று சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் எழுதுகிறார்.