பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

அரிதரங்கிற்

செய்தெழினி மூன்றமைத்துச் சித்திரத்தாற் பூதரையு

மெய்த வெழுதி யியற்று'

என்றார் பரதசேனாபதியாரும்.

(சிலம்பு., அரற்கேற்று., 109ஆம் அடி, அடியார்க்கு நல்லார் உரை மேற்கோள்)

"புண்ணியமால் வெற்பிற் பொருந்துங் கழைகொண்டு கண்ணிடைக் கண்சாண் கனஞ்சாரு-மெண்ணிய நீளமெழு சாண்கொண்டு நீராட்டி நன்மைபுனை நாளிற் றலைக்கோலை நாட்டு.'

'ஆவ தகத்தியனார் சாபத்தா னான்மூங்கில்'

என்றார் பரதசேனாபதியார்.

(சிலம்பு., அரங்கேற்று., 116ஆம் அடி, அடியார்க்கு நல்லார் உரை மேற்கோள்)

குறிப்பு : 'பரத சேனாபதீயம்' என்னும் வேறொரு நூலும் உண்டு. இது, பழைய பரத சேனாபதீயத்திற்கு மிகப் பிற்பட்டது. இதுவும், பாயிரம்வரையில் கிடைக்கிறதல்லாமல் நூல் முழுவதும் கிடைக்கவில்லை. இது, டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல் வெளியீட்டின் முதல் நூலாக அச்சிடப்பட்டிருக்கிறது.

17. பரிமளகா நாடகம்

இந்நாடகம் இயற்றியவர், சோமகேசரி நாடகம் இயற்றிய மாப்பாண முதலியார் (1777-1827) என்பவர். இவர், யாழ்ப்பாணத்துத் தென்ம ராட்சியைச் சேர்ந்த மட்டுவாள் என்னும் கிராமத்தில் பிறந்தவர். இவர் இயற்றிய பரிமளகா நாடகமும், சோமகேசரி நாடகமும், குறவஞ்சி நாடகமும் மறைந்துபோயின.

18. மதிவாணர் நாடகத்தமிழ் நூல்

மதிவாணன் என்னும் பாண்டிய அரசன் இயற்றிய தாகலின் இந்நூலுக்கு இப்பெயர் வந்தது. சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் அடியார்க்கு நல்லார் இந்நூலைப்பற்றி.