பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

207

பெயருள்ள நூல் ஒன்று இருந்தது என்பதும், அதனை உரையாசிரியர் களும் ஏனைய புலவர்களும் பயின்றுவந்தனர் என்பதும் உறுதி.

தேவாரப் பாடல்கள் சிலவற்றை அகத்தியர் தொகுத்து வைத்தார் என்றும், அதற்கு “அகத்தியர் தேவராத் திரட்டு” என்பது பெயர் என்றும் சைவர் கூறுவர். ஆழ்வார்களின் பாடல்களைத் தொகுத்த நாதமுனிகள், முதலில் அகத்தியர் ஆணை பெற்றுப் பிறகு நாலாயிரப் பிரபந்தத்தைத் தொகுத்தார் என்று வைணவர் கூறுவர்.

இனி, அகத்தியத்தைப் பற்றி உரையாசிரியர்கள் கூறும் கருத்தைக் காட்டுவோம்:

66

"அகத்தியனாராற் செய்யப்பட்ட மூன்று தமிழ்.

(தொல்.,பொருள்., உவமவியல், 37, பேராசிரியர் உரை)

“இதன் (தொல்காப்பியத்தின்) முதனூல் செய்த ஆசிரியனால் (அகத்தியரால்) செய்யப்பட்ட யாழ்நூலுள்ளும் சாதியும் உவமத் துருவும் திருவிரியிசையும் எனக் கூறப்பட்டவற்றுட் கட்டளைப் பாட்டுச் சிறப்புடையன சாதிப்பாட்டுகளே.

66

وو

(தொல்., பொருள்., செய்யுள், 51, பேராசிரியர் உரை)

அது முதனூலாகிய அகத்தியமே போலும். என்னை? அஃது இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் மூன்று பிண்டத் தினையும் அடக்கி நிற்றலின்.'

""

(தொல்.,பொருள்., செய்யுள், 172, பேராசிரியர் உரை)

இதனால் அகத்திய முனிவர் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என்னும் முத்தமிழுக்கும் இலக்கணம் செய்திருந்தார் என்பது தெரிகிறது. மேலும், பேராசிரியர் கூறுகிறார்:

66

தலைவர் (சிவபெருமான்?) வழிநின்று தலைவனாகிய அகத்திய னாற் செய்யப்பட்டதும் முதனூலென்பது அறிவித்தற்கும், பிற்காலத்துப் பெருமானடிகள் களவியல் (இறையனார் அகப் பொருள்) செய்தாங்குச் செய்யினும் பிற்காலத்தானும் முதனூலென்பது அறிவித்தற்கும். அங்ஙனம் வினையினீங்கி விளங்கிய அறிவினான் முதனூல் செய்தா னென்பது அறிவித்தற்கும் இது கூறினானென்பது. எனவே, அகத்தியமே முற்காலத்து முதனூலென்பதூஉம். அதன் வழித்தாகிய தொல்காப்பியம் அதன் வழிநூலென்பதூஉம் பெற்றாம்.