பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

209

'மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன்

றன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த

துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற்

பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த’

எனப் பாயிரஞ் செய்தற்கு உடன்பட்டமையி னென்பது.

இவற்றா னெல்லாம் அகத்தியமே முற்காலத்து முதனூ லென்பதூஉந், தொல்காப்பியம் அதன் வழிநூலென்பதூஉம்

66

படுமென்பது.

(தொல்.,பொருள்.,மரபு, 94, பேராசிரியர் உரை)

"தீயினன்ன ஒண்காந்தள்” என வரும் மலைபடுகடாம் 145ஆம் அடிக்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர் கூறுவது :

66

“இதற்கு நன்ன னென்னும் பெயர் தீயோ டடுத்த தன்மையின், னந்தமாய், பாடினாரும் பாடப்பட்டாரும் இறந்தாரென்று ஆளவந்த பிள்ளையாசிரியர் குற்றங் கூறினாரா லெனின், அவர் அறியாது கூறினார்: செய்யுட் செய்த கௌசிகனார் ஆனந்தக் குற்றமென்னும் குற்றமறியாமற் செய்யுட் செய்தாரேல், இவர் நல்லிசைப் புலவராகார். இவர் செய்த செய்யுளை நல்லிசைப் புலவர் செய்த ஏனைய செய்யுள் களுடன் சங்கத்தார் கோவாமல் நீக்குவர்; அங்ஙன நீக்காது கோத்த தற்குக் காரணம் ஆனந்தக் குற்ற மென்பதோர் குற்றம் இச்செய்யுளுட் கூறாமையா னென்றுணர்க. நூற்குற்றங் கூறுகின்ற பத்துவகைக் குற்றத்தே, ‘தன்னா னொருபொருள் கருதிக் கூறல்' என்னுங் குற்றத்தைப் பின்னுள்ளோர் ஆனந்தக் குற்றமென்பதோர் குற்றமென்று நூல் செய்ததன்றி' அகத்தியனாரும் தொல்காப்பியனாரும் இக் குற்றங் கூறாமையிற் சான்றோர் செய்யுட்கு இக்குற்றமுண்டாயினும் கொள்ளா ரென மறுக்க.

---

(பத்துப்பாட்டு, மலைபடுகடாம், நச்சினார்க்கினியர் உரை)

தொல்காப்பிய (பொருள்., மரபு., 108ஆம் சூத்திரம்) உரையில் பேராசிரியர் எழுதுவதாவது : “தன்னா னொரு பொருள் கருதிக் கூற லென்பது மலைபடுகடாத்தினை ஆனந்தக் குற்றமெனப் பிற்காலத்தா னொருவன் ஒரு சூத்திரங் காட்டுதலும், பதமுடிப்பென்பதோர் இலக்கணம் படைத்துக் கோடலும் போல்வன.'