பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

66

“அராகந் தாமே நான்கா யொரோவொன்று வீதலு முடைய மூவிரண் டடியே.

ஈரடி யாகு மிழிபிற் கெல்லை. தரவே யெருத்த மராகங் கொச்சக மடக்கியல் வகையோ டைந்துறுப் புடைத்தே.

கொச்சக வகையினெண்ணொடு விராஅ

யடக்கிய லின்றி யடங்கவும் பெறுமே.

211

1

W N

4

(தொல், பொருள், செய்யுளியல், 117, இளம்பூரணர், உரைமேற்கோள்)

66

'இருவயி னொத்து மொவ்வா வியலினுந்

தெரியிழை மகளிரொடு மைந்தரிடை வரூஉங்

கலப்பே யாயினும் புலப்பே யாயினு

மைந்திணை மரபி னறிவரத் தோன்றிப்

பொலிவொடு புணர்ந்த பொருட்டிற முடையது கலியெனப் படூஉங் காட்சித் தாகும்

என்று அகத்தியனார் ஓதுதலின் கலிப்பா அகப்பொருளென வழங்கும்.

وو

(தொல்.,பொருள்., செய்யுளியல், இளம்பூரணர் உரை மேற்கோள்)

கீழ்க்காணும் அகத்தியச் சூத்திரங்களை மயிலை நாதர் தமது

நன்னூல் உரையில் மேற்கோள் காட்டுகிறார்:

66

“பெயரினும் வினையினு மொழிமுத லடங்கும்

வயிர வூசியு மயன்வினை யிரும்பும் செயிரறு பொன்னைச் செம்மைசெய் யாணியும் தமக்கமை கருவியுந் தாமா மவைபோல் உரைத்திற முணர்த்தலு முரையது தொழிலே.

பலவி னியைந்தவு மொன்றெனப் படுமே அடிசில் பொத்தகஞ் சேனை யமைந்த கதவ மாலை கம்பல மனைய.

1

2

3

ஏழியன் முறைய தெதிர் முக வேற்றுமை

வேறென விளம்பான் பெயரது விகாரமென் றோதிய புலவனு முளனொரு வகையா

னிந்திர னெட்டாம் வேற்றுமை யென்றனன்.

4