பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

உரிமை யியற்சீர் மயங்கியும் பானான்

கிருமை வேறியல் வெண்பா வாகியும் வருமெனும் வஞ்சிக் கலியினே ரீற்ற வியற்சீ ராகா வென்மனார் புலவர்.

நிரையிறு நாலசை வஞ்சி யுள்ளால் விரவினு தேரீற் றல்லவை யியலா.

20

21

நேர்நடு வியல வஞ்சி யுரிச்சீ ராசிரி யத்திய லுண்மையு முடைய.

99

22

(யாப்பருங்கலம், சீரோத்து உரை மேற்கோள்)

“ஈரசை யியற்சீ ரொன்றுத லியல்பே.

23

(யாப்பருங்கலம், தளையோத்து உரை மேற்கோள்)

“இரண்டினும் மூன்றினும் வஞ்சி யாகும்

நாற்சீ ரடியாற் பாப்பிற மூன்றே.

24

எல்லா வடியினு மினப்பா நாற்சீர்

அல்லா மேலடிய பாவினுக் கியலா.

25

ஒன்று மிரண்டு மூன்றும் நான்கும்

என்றிம் முறையே பாவின் சிறுமை

தத்தங் குறிப்பினவே தொடையின் பெருமை.

26

(யாப்பருங்கலம், அடியோத்து 10 உரை மேற்கோள்)

“மறுதலை யுரைப்பினும் பகைத்தொடை யாகும்

அளபெடை யினம்பெறத் தொடுப்ப தளபெடை.

27

ஒரூஉத் தொடை

யிருசீ ரிடைவிடி லென்மனார் புலவர்.

மாறல் தொவ்வா மரபின செந்தொடை.

ஒருசீ ரடிமுழு தாயி னிரட்டை.

28

29

30

மயங்கிய தொடைமுதல் வந்ததன் பெயரா

லியங்கினுந் தளைவகை யின்னண மாகும்.

31

(யாப்பருங்கலம், தொடையோத்து உரை மேற்கோள்)